7. ஏழாம் வேற்றுமை
(Locative case) |
இல், உள், இடம், முன், பின்
கண், பால், கீழ், மேல் முதலியன. |
8. எட்டாம் வேற்றுமை
அல்லது விளி வேற்றுமை
(Vocative case or Nominative
case of address) |
தனியாக உருபு இல்லை.
முதல்
வேற்றுமையின் மாறுதலே
எட்டாம் வேற்றுமையாகிறது,
ஈறு குன்றல், ஈறு மிகுதல்,
ஈற்றயல் திரிதல் இவையே.
அம்மாறுதல்கள் இயல்பாகவும்
இருப்பதுண்டு. |
முதல் வேற்றுமை
முதல் வேற்றுமையை எழுவாய் வேற்றுமை என்றும் கூறுவர்.
இது திரிபில்லாத பெயர்ச் சொல்லேயோகும். இதற்கு உருபுகள்
இல்லை. ஆனால், இதற்கு ஆனவன், ஆகின்றவன், ஆனவள்,
ஆகின்றவள், ஆனவர், ஆகின்றவர், ஆனது, ஆவது ஆனவை,
ஆகின்றவை, என்பவன், என்பவள், என்பவர், என்பது என்பவை
ஆகிய ஐம்பாற் சொல்லுருபுகளும் உண்டு என்று கூறுவர்.
இரண்டாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை உருபு ஐ ஆகும். இவ்விரண்டாம்
வேற்றுமையானது ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல் ஒத்தல்,
உடைமை முதலிய பொருள்களில் வரும். இன்ன கருத்தில் வருவது
என்பதைத்தான் இன்ன பொருளில் வருவது என்கிறோம்.
இப்பொருள்களைப் பொதுவாகப் கூறினால் செயப்படுபொருள் எனலாம்.
குடத்தை வனைந்தான் -
ஆக்கப்படுபொருள்
கோட்டையை இடித்தான் - அழிக்கப்படுபொருள்
வீட்டை அடைந்தான் - அடையப்படுபொருள்
ஊரை விட்டகன்றான் - நீங்கப்படுபொருள்
புலியை ஒத்திருக்கிறான் - ஒப்புப்பொருள்
செல்வத்தையுடையான் - உடைமைப்பொருள்
|