பக்கம் எண் :

பெயர் வகைகள்79

3. சீவகனால் நாடு மீட்கப்படல் வேண்டும்.

4. சீவகனுக்கு ஆசிரியர் கல்வி கற்பித்தார்.

5. சீவகனில் இளையவன் கந்துக்கடன் மகன்.

6. சீவகனது வீரம் அருட்பண்பு மிக்கது.

7. சீவகனிடம் விடாமுயற்சி இருந்தது.

8. சீவகனே வாழ்க!

இவ்வாக்கியங்களில் சீவகன் என்னும் பெயரானது பொருளில்
வேற்றுமையடைந்திருத்தலைக் காணலாம்.

இவ்வேற்றுமை எட்டு வகைப்படும். எண்ணாலேயே
வேற்றுமையின் பெயர்கள் வழங்கப்படுகின்றன. வடமொழியில் 8
வேற்றுமைகள் உளவாம்; இலத்தீன் மொழியில் 6 வேற்றுமைகளும்,
கிரேக்க மொழியில் 5 வேற்றுமைகளும், ஆங்கிலத்தில் 5
வேற்றுமைகளும் இருக்கின்றனவாம்.

வேற்றுமை (Case) வே.உருபு (Case Signs)
1. முதல் வேற்றுமை
(Nominative Case)
உருபு இல்லை
2. இரண்டாம் வேற்றுமை
(Objective Case)
3. மூன்றாம் வேற்றுமை
(Instrumental Case)
ஆல், ஆன், ஒடு, ஓடு,
உடன், கொண்டு.
4. நான்காம் வேற்றுமை
(Dative Case)
கு, பொருட்டு, நிமித்தம், ஆக.
5. ஐந்தாம் வேற்றுமை
(Ablative of motion)
இல், இன், இருந்து, நின்று.
6. ஆறாம் வேற்றுமை
(Possessive case)
அது, ஆது, அ, உடைய.