|
1
1
மதிப்படைச் சொற்கள்
மக்கள் பெயருக்குமுன் மதிப்புக்குறித்துச் சேர்க்கும்
அடைச் சொற்கள் கீழ்வருமாறு:
|
பெயர் |
அடைச்சொல் |
|
மணமாகாத இளைஞன்
பெயருக்கு முன்... |
குமரன்
(Master) |
|
மணமாகாத இளைஞை
பெயருக்கு முன்... |
குமரி
(Miss) |
|
இளந்தை
(Youth) கடந்த
ஆடவன் பெயருக்கு முன்... |
திருவாளன்
(Mr.) |
|
இளந்தை கடந்த பெண்டின்
பெயருக்கு முன்... |
திருவாட்டி
(Mrs.) |
|
கண்ணியம் வாய்ந்த
ஆடவன் பெயருக்கு முன்... |
பெருமான் |
|
கண்ணியம் வாய்ந்த பெண்டின்
பெயருக்கு முன்... |
பெருமாட்டி |
னகரமெய்யும் ளகரமெய்யும் இகரவுயிரும் இறுதியிற் கொண்ட
ஒருமை யீறுகள் உலக வழக்கில் உயர்வு குறியாமையின், கல்வி செல்வம் பதவி அறிவு, மூப்பு முதலியவற்றால்
உயர்வு பெற்றவர் பெயரையும், அவர் பெயருக்கு முன்வரும் அடைச்சொல்லையும், உயர்வுப்பன்மை வடிவிலேயே
குறித்தல் வேண்டும்.
|
ஒருமை |
உயர்வுப் பன்மை |
பன்மை |
|
அழகன்
|
அழகனார்
|
அழகர், அழகன்மார் |
|
தந்தை
|
தந்தையார்
|
தந்தையர், (தந்தைமார்) |
|
அப்பன்
|
அப்பனார்
|
அப்பன்மார் |
|
தகப்பன்
|
தகப்பனார்
|
தகப்பன்மார் |
|
அம்மை |
அம்மையார் |
அம்மையர், அம்மைமார் |
|
தாய்
|
தாயார்
|
தாயர், தாய்மார் |
|
இளைஞன்
|
இளைஞனார் |
இளைஞர் |
|
குமரன்
|
குமரனார் |
குமரர், குமரன்மார் |
|
இளைஞை
|
இளைஞையார்
|
இளைஞையர் |
|
குமரி
|
குமரியார்
|
குமரியர், குமரிமார் |
|
ஆடவன்
|
ஆடவனார் |
ஆடவர், ஆடவன்மார் |
|
திருவாளன்
|
திருவாளர்
|
திருவாளர், திருவாளன்மார்
திருவாளனார் |
|
திருவாட்டி |
திருவாட்டியார் |
திருவாட்டிமார் |
|