|
மூ
மூவேறு கடல்கோள்களாற் படிப்படியாக முழுகிப்போன குமரி நாட்டின்
தென்கோடியிலிருந்தது குமரிமலை யென்றும், வடகோடியி லிருந்தது குமரியாறு என்றும், வேறுபாடறிதல்
வேண்டும்.
2. மென்மை
மாந்தன் பிறந்தகமும் தமிழன் பிறந்தகமும் பழம் பாண்டிநாடும்
ஆகிய குமரிநாடு, நாகரிக நாடாயினும், உலக முதல் நாடாதலால், அதில் வாழ்ந்த பழங்குடி மக்களான
தமிழரின் வாயில், உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டுமாக முப்பதெழுத்துகளே தோன்றின. அவற்றுள்ளும்,
ழ, ள, ற, ன என்னும் நான்கும் பிந்தித் தோன்றியவையாகும்.
தமிழ்ச்சொன் முதலில் தனிமெய்யும் சில உயிர்மெய்யும்,
சொல்லிடையில், சில மெய்கட்குப் பின் சில வேற்றுமெய்யும், சொல்லிறுதியில் வல்லின மெய்யும்,
வருவதேயில்லை. இக் கட்டுப்பாடும் விலக்கும் வேண்டுமென்று செய்யப்பட்டவை யல்ல. மாந்தன்
வாயொலி வளர்ச்சி நோக்கின், அக்காலத் தமிழர் சிறுபிள்ளை நிலையிலிருந்ததனால், அவர்
வாயில் எளிய முறையில் ஒலிக்கக்கூடிய தனியொலிகளும் கூட்டொலிகளுமே பிறந்தன. இக்காலத்தும்,
நெல்லை மாவட்ட நாட்டுப்புற மக்கள், சாக்ஷி என்னும் வடசொல்லைச் சாக்கி என்றும், ஜாதி என்னும்
வடசொல்லைச் சாதி என்றும், ஒலிப்பதைக் காணலாம்.
இங்ஙனம் எளிய வொலிகளைக் கொண்டிருந்தும், தமிழின்
ஓசையினிமைக்கு எள்ளளவுங் குறைவில்லை.
“தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்கக்
கொண்டல்கள் முழவி னேங்கக்
குவளைகண் விழித்து நோக்கத்
தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்
வண்டுக ளினிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ’’
(நாட்டுப். 4)
என்னுங் கம்பராமாயணச் செய்யுளைப் பாடிக் காண்க.
ஒரு மொழிக்கு வேண்டியவை சொற்களே யன்றித் தனியெழுத்துக
ளல்ல. குமரிநாட்டுப் பொதுமக்கள், முப்பதொலிகளைக் கொண்டே, அக்காலத்தில் மட்டுமன்றி இனிவருங்
காலத்தும் மாந்தன் மனத்தில் தோன்றக்கூடிய எல்லாக் கருத்துகளையும் குறிக்கத்தக்க,
வேர்ச்சொற் களைப் பிறப்பித்திருப்பதால், தமிழுக்குப் பிறமொழி யொலிகளே தேவையில்லை.
உரப்பியும் எடுத்தும்
கனைத்தும் ஒலிக்கும் மூவகைச் செயற்கை வல்லொலிகளும், மூச்சொலியும், தமிழிலின்மையால் அது
சிறு பிள்ளை களும் நோயாளியரும் கழிபெரு மூப்பினரும் எளிதாய் ஒலிக்கத் தக்கதா யிருப்பதுடன்;
ஏனை மொழிகளி லியலாத நூற்றுக்கணக்கான திருப்புகழ்
வண்ணங்களும்; வல்லினப் பாட்டு, மெல்லினப் பாட்டு,
இடையினப் பாட்டு
|