பக்கம் எண் :

தமிழின் தனியியல்புகள்19

அடிமடக்கு, இரு பொரு ளிரட்டுறல், பல்பொரு ளிரட்டுறல், நடுவெழுத்தணி, முப்பாகி, பதின்பங்கி, பதிற்றுப் பதின்பங்கி முதலிய சொல்லணிகளும்; கோமூத்திரி, சுழிகுளம், தாமரைக் கட்டு, சக்கரக்கட்டு, தேர்க்கட்டு, இருநாகப் பிணையல், எண்ணாகப் பிணையல் முதலிய மிறைப் பாக்களும் (சித்திரக் கவிகளும்); பாடற்கேற்றதாயு மிருக்கின்றது.

3. தாய்மை

    மக்கட் பெருக்கம், வணிகம், கொள்ளைக்கும் போருக்கும் பழிக்கும் தப்பல், புதுநாடு காணல், கடல்கோள் முதலிய பல கரணியங்களால், தமிழர் வடக்கு நோக்கிச் சென்று, நாளடைவில் தமிழ் திராவிடமாகத் திரிந்ததால் தாமும் திராவிடராயினர். பின்னர்த் திராவிடருள் ஒரு சாரார், மேற்கூறிய கரணியம் பற்றியே வடமேற்காகச் சென்று, ஐரோப்பாவை யடைந்து ஆரியராக மாறினர்.

    ஆதலால், குமரிநாட்டுத் தமிழே திரவிடத்திற்குத் தாயும் ஆரியத் திற்கு மூலமுமாயிற்று.

    தமிழ் எங்ஙனந் திரவிடமாகத் திரிந்ததென்பதற்கு, ஒரு தெலுங்கு வினைச்சொல்லின் கூறுகளே போதுமானவை.

எ-டு: ஆகு என்னும் வினைச்சொல்

சொல்வகை தமிழ் தெலுங்கு

முதனிலை

ஆ, ஆகு

அவு

ஏவல் ஒருமை

ஆ, ஆகு

கா

ஏவல் பன்மை

ஆகும், ஆகுங்கள்

கம்மு, கண்டி

இ. கா. ஆ. பா. வினைமுற்று

ஆயினான் 

அயினாடு

இ. கா. பெயரெச்சம்

ஆன

அயின, ஐன

இ. கா. வினையெச்சம்

ஆய், ஆகி

அயி, ஐ

எ. கா. வினையெச்சம் 

ஆக 

கா, அவ

நிலைப்பாட்டு வினையெச்சம்

ஆயிற்றேல் 

அயித்தே

எ. கா. வினைமுற்று

ஆகும், ஆம்

அவுனு

மறுப்பிணைப்புச் சொல்

ஆனால்,
ஆயின்,
ஆயினால்

கானி, 
அயினனு

ஒத்துக்கொள் விடைச்சொல்

ஆம் (yes)

அவுனு

படர்க்கை ஒன்றன்பால்
எ. கா. எதிர்மறை வினைமுற்று

ஆகாது

காது

தொழிற்பெயர்

ஆதல்,
ஆகுதல்

அவுட்ட,
காவடமு

கூட்டுவினை    

ஆகவேண்டும்

காவலெனு