4
4
தமிழ் பற்றிய அடிப்படை உண்மைகள்
ஒருவர் தமிழின் இயல்பை
அல்லது சிறப்பைச் செவ்வையாய் அறிய வேண்டுமெனின், மூவடிப்படை யுண்மைகளை முற்பட வுணர்தல் வேண்டும்.
அவையாவன:
1. தமிழ் குமரிநாட்டில்
தோன்றியதென்பது
தமிழ் குமரிநாட்டில் தோன்றியதென்பதனால்,
தமிழர் தென்னாட்டுப் பழங்குடி மக்கள் என்பதும் உடன் பெறப்படும்.
“பஃறுளி யாற்றுடன் பன்மலை
யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல்
கொள்ள
வடதிசைக் கங்கையும்
இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன்
வாழி’’
(சிலப்.
11 : 19 - 22)
என்று பதினெண் நூற்றாண்டுகட்கு
முன்னரே, நற்றிற நடுநிலை முத்தமிழ் முனிவன் இளங்கோவடிகள் கூறிய தேர்தல் வேண்டாத் தெண்பொருட்
கூற்றும், “தொடியோள் பௌவமும்” என்னும் சிலப்பதிகார வேனிற்காதைத் தொடருக்கு அடியார்க்குநல்லார்
உரைத்த வுரையும், இறையனா ரகப் பொருளுரை முக்கழக வரலாறும், தமிழின் குமரிநாட்டுத் தோற்றத்திற்குப்
போதியனவும் மறுக்க வொண்ணாதனவுமான சான்றுகளாம்.
தமிழ் வரலாற்றிற்கெட்டாத
தொன்முது பழைமையான உலக முதன் மொழியாதலால், கிறித்துவிற்குப் பிற்பட்ட காலத்து முக்கழக
வரலாற்றிற் பல காலமுரண்பட்ட குழறுபடைகள் குழம்பிக் கிடப்பது இயல்பே. அச் சிக்கல்களைக்
களைந்து உண்மைகளை வடித்தெடுத்தல் வரலாற்றாராய்ச்சியாளன் கடமையாகும். அக் கடமையை மேற்கொண்டே,
திரு. (P.T.) சீநிவாசய்யங்காரும் பேரா.
(V.R.)இராமச்சந்திர தீட்சிதரும் தமிழரின் தென்னாட்டுப்
பழங்குடிமையைத் தத்தம் நூல்களில் ஐயந்திரிபற நாட்டிச் சென்றனர்.
ஆயினும், எல்லையற்ற
இனவெறியும் மொழிவெறியும் பித்தொடு கலந்த பேய்கோள் போல் வருத்துவதால், பேரா. (கே)
நீலகண்ட சாத்திரியாரும் அவர் மாணவரான பர்.
(Dr.) (N.)
சுப்பிரமணியனாரும், பிறரும், இடைக்காலத்தில் தீத்திறமாகவும் தெற்றுமாற்றாகவும்
புகுத்தப்பட்ட
|