|
சமற
சமற்கிருத மேம்பாட்டை என்றும் போற்றிக் காத்தற்பொருட்டு,
தமிழரின் குமரிநாட்டுத் தோற்றத்தை விடாப்பிடியாய் மறைத்து வருகின்றனர்.
இன்றும் திராவிட மொழிகட்குள் முந்தியதும் தலைமையானதும்
தமிழேயாதலால். ஆழ்ந்த தமிழ்ச் சொல்லாராய்ச்சி செய்யாதவர் தமிழன் பிறந்தகத்தை ஆய்ந்து
காண்டலரிது. சொற்களின் வடிவொப்புமை காண்டல் வேறு; அவற்றின் முன்மை பின்மை ஆய்ந்தறிதல்
வேறு. பர். (Dr.) (N.)
இலாகோவாரி
(Lahovary)
தம் ‘திரவிடத் தோற்றமும் மேற்கும்’
(Dravidian Origins and the west) என்னும் நூலில், சொற்களின் வரலாற்றை ஆராயாது
ஒருசார் வடிவொப்புமை யொன்றே கொண்டு, திரவிடன் பிறந்தகம் நண்ணிலக் கடற்கரைப் பாங்கர்
எனக் காட்ட முயல்கின்றார். திரவிடத்திற்கு மூலம் (குமரிநாட்டுத்) தமிழ் என்றும், திரவிடனுக்கு
முந்தியவன் தமிழன் என்றும், தமிழம் என்னுஞ் சொல்லே த்ரமிள--த்ரமிட--த்ரவிட--த்ராவிட
எனத் திரிந்ததென்றும், அடிப்படை யுண்மைகளையே அவர் அறியவில்லை. பல சொற்களைத் தவறாகவும்
பிரித்துள்ளார்.
கால்டுவெலார் காலத்தில்,
தொல்காப்பியமும் கடைக்கழக (சங்க) இலக்கியமும் தலைமைத் தமிழ்ப் புலவர்க்குந் தெரியாது
மறையுண்டு கிடந்தமையாலும்,மறைமலையடிகள் போலும் வழிகாட்டியின்மையாலும், அவர் அயல்நாட்டினராதலாலும்,
ஏதேன் தோட்டக் கதையை எழுத்துப்படி நம்பிய ‘கிறித்தவக் குரவராதலாலும், அவர் தமிழரின்
முன்னோரை மேனாட்டினின்று வந்தேறியராகக் கொண்டதிற் குற்றமொன்றுமில்லை. அவர் அங்ஙனங்
கொண்டவிடத்தும், தமிழ் ஆரியத்திற்கு மூத்ததென்றும், உலக முதன்மொழியொடு நெருங்கிய தொடர்புடையதென்றும்,
கூறியது மிகமிகப் பாராட்டத்தக்கதாம்.
இன்று, சென்னைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியிதழில்
(Journal of the Madras University), திரவிடத் தோற்றப் புதிர்வினா--ஒரு மொழியியல்
மாந்தனூலியல் பழம் பொருட் கலையியல் அடுத்தாய்வு
(The Problem of Dravidian
Origins--A Linguistic, Anthropological and Archaeological Approach)
என்னும் தலைப்பில்,
1956 - 57-ல் பேரா. (T.) பாலகிருட்டிண நாயர் நிகழ்த்திய வயவர் வில்லியம் மெயெர் மானியச்
சொற்பொழிவுகள் (Sir William Meyer Endowment Lectures) வெளியிடப்பட்டு வருகின்றன.
அவை ஆழ்ந்த தமிழ்ச் சொல்லியலாராய்ச்சியில்லார்க்கு முழு மெய்போலத் தோன்றும், தமிழன்
பிறந்தகம் மேனாட்டதென்பதற்கு அவை காட்டும் சான்றுகளின் போலிமை, அடுத்த ஆண்டு நான்
வெளியிடவிருக்கும் The Lemurian Language and its Ramifications
என்னும் நூலில் விரிவாக
விளக்கப் பெறும்.
அடிப்படைக் கொள்கை
தவறாயிருப்பின் எத்துணைப் பேரறிஞர் உறழாடினும் முடிவு தவறாகவே யிருக்கும், தென்குமரி நாட்டானை
|