|
த
திரிவர்க்கத்தின் மொழிபெயர்ப்பென்றும், தரும சாத்திரம்
அருத்த சாத்திரம் காம சூத்திரம் ஆகிய வட நூல்களைத் தழுவிய தென்றும், அஞ்சாது அலப்பி
வருகின்றனர்.
ஐவகை யிலக்கணமுங் கூறும் தொல்காப்பியத்தை, எழுத்தும்
சொல்லுமே கூறும் பிராதிசாக்கியங்களையும் பாணினீயத்தையும் பின்பற்றியதென்று பிதற்றி
வருகின்றனர்.
மெய்ப்பொருள் திரிப்பாலும் தொன்மக் கதைகளாலும் சிவமதமும்
திருமால் மதமும் ஆரியமாக்கப்பட்டுள்ளன.
தமிழர் கண்ட அறம்பொரு ளின்ப வீடென்னும் நாற்பொருட்
பாகுபாடு, ‘தர்மார்த்த காமமோட்ச’ என்னும் ஆரியச் சொற்றொடரின் மொழிபெயர்ப்பாகக் கூறப்படுகின்றது.
தமிழன் பிறப்பிற் பிராமணனுக்குத் தாழ்ந்தவனென்றும்,
அத் தாழ்வு மறுமையில்தான் நீங்குமென்றும் கூறும் நெஞ்சத் திமிரும் வாய்க்கொழுப்பும் வெளிப்படையாக
இருந்துவருகின்றன.
இங்ஙனம், அடிமுதல் முடிவரை, தமிழ்மொழி யிலக்கிய நாகரிகப்
பண்பாடனைத்தும் தருக்கப் பொருளாக்கப்பட்டிருப்பதால், சமற்கிருதத் திற்கும் தமிழுக்கும் இடைப்பட்ட
உறவு, தாக்குவோனுக்கும் தற்காப் போனுக்கும் இடைப்பட்டதாகும்.
ஆகவே, அடிமையரும் அறிவிலியரும் கோழையருங் கோடன்
மாருமா யிராது, உண்மையை எடுத்துரைத்துத் தாம் இழந்தவுயர்வை மீளப் பெறுவதே உயர்திணை மக்கட்குரிய
பண்பாம்.
“வேளாண்மை செய்து விருந்தோம்பி வெஞ்சமத்து
வாளாண்மை யாலும் வலியராய்த் - தாளாண்மை
தாழ்க்கும் மடிகோ ளிலராய் வருந்தாதார்
வாழ்க்கை திருந்துத லின்று.’’
(பழ.
151)
- இலண்டன் தமிழ்ச்சங்க ஆண்டு மலர் 1972-73
|