|
ம
மாயும். திரவிடம் ஆரியமாயும் திரிந்தமைக்கும், ஆரியம்
பரவப் பரவத் திரவிடப் பரப்பும் திரவிடம் பரவப் பரவத் தமிழ்ப் பரப்பும் குன்றி
வருவதற்கும், ஒரு சான்றாம். தமிழ் எனினும் செந்தமிழ் எனினும் ஒன்றே.
செந்தமிழினின்று கொடுந்தமிழ் அல்லது கொடுந்தமிழ்கள்
பிரித்துணரப்படு முன்பும், பிரித்துணரப்பட்டபின்பும், தமிழைத் திராவிடம் என்னும் பெயராலேயே
வடவர் குறித்து வந்திருக்கின்றனர். வேத காலத்து வட்டார மொழிகளாகிய பிராகிருதங்களுள் ஒன்றான
தமிழ் திராவிடீ எனப்பட்டது. ஆந்திர - திராவிடப் பாசை என்னும் கூட்டுப் பெயரிலும், பஞ்ச திராவிடப்
பெயர்களுள்ளும் தமிழ் திராவிடம் என்றே குறிக்கப் பெற்றது. கி.பி.5ஆம் நூற்றாண்டில் மதுரையில்
புத்த நெறியினரால் நிறுவப் பெற்ற தமிழ்க் கழகம், தமிழ்ச் சங்கம் எனப்பட்டது. இற்றைக்கு
ஏறத்தாழ 480 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பிள்ளை லோகார்ய சீயர் தமிழ்நூலைத் திராவிட சாத்திரம்
(த்ராவிட சாஸ்த்தரம்) என்றனர். கி.பி.18ஆம் நூற்றாண்டிலிருந்த தூய தமிழரான தாயுமான அடிகளும்
வடநூல் வழக்கையொட்டி.
“வல்லா னொருத்தன் வரவுந்திரா விடத்திலே
வந்ததா விவகரிப் பேன்’’
என்றார். இதனால் தமிழ் (தமிழம்) என்னும் பெயரே வடமொழியில்
திராவிடம் எனத் திரிந்துள்ளமை தேற்றம்.
“செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி’’
(883)
என்று தொல்காப்பியர் கொடுந்தமிழ் நிலங்களைப் பன்னிரண்டாகக்
கூறினர். ஆயின், அவை எவை எனக் குறித்திலர். அவர் காலத்தில் வேங்கடம் செந்தமிழ்நாட்டு
வடவெல்லையா யிருந்தமையாலும், கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரையிருந்த கடைக்கழகக் காலத்திலும் வேங்கடம்
வரை தமிழகமா யிருந்தமையாலும், தொல்காப்பியத்திற் குறிக்கப்பெற்ற பன்னிரு கொடுந்தமிழ் நிலங்களும்
வேங்கடத்திற்கு அப்பாற்பட்டவை யாயே இருந்திருத்தல் வேண்டும். தமிழிலக்கண உரையாசிரியரெல்லாம்
கி.பி.11ஆம் நூற்றாண்டிற்கு மேற்பட்டவராதலால், பண்டை வரலாற்றை யறியாமல் தம் கால நிலைக்கேற்ப,
“தென்பாண்டி குட்டங் குடற்கற்கா வேண்பூழி
பன்றி யருவா அதன்வடக்கு - நன்றாய
சீத மலாடு புனனாடு செந்தமிழ்சேர்
ஏதமில் பன்னிருநாட் டெண்’’
எனக் கொடுந்தமிழ் நிலங்களைப் பிழைபடக் குறித்தனர்.
இனி, தொல்காப்பியத்திற்கு ஒருமருங்கு மாறாக,
“செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்
ஒன்பதிற் றிரண்டினில் தமிழொழி நிலத்தினும்
தங்குறிப் பினவே திசைச்சொல் என்ப’’
(நன்.
273)
|