|
இ
இறையடியார் பெயரே. பொதுமகன் பெயராயின் அப்படியே
யிருக்கலாம். புள்ளி வேண்டியதில்லை, துறவியார் பெயருக்கு முன் தவத்திரு என்பதையும், தமிழ்த்தொண்டர்
பெயருக்கு முன் தமிழ்த்திரு என்பதையும், மறையொழுக்கத்தினர் பெயருக்குமுன் மறைத்திரு என்பதையும்
அடைச்சொல்லாக ஆளலாம்.
எ-டு : தவத்திருக்குன்றக்குடியடிகள்,
தமிழ்த்திரு மறைமலை யடிகள்,
மறைத்திரு மணியம் அவர்கள்.
ஸ்ரீ ல ஸ்ரீ என்னும் சிவமட வழக்கைத் திருத்தவத்திரு அல்லது
பெருந்தவத்திரு என்று குறிக்கலாம்.
திருமதி என்னும் அடைச்சொல், திரு. என்னும் தென்சொல்லையும்
மதி என்னும் வடமொழியீற்றுத் திரிபையுங் கொண்ட இருபிறப்பி
(Hybrid) ஆதலால், அதை அறவே
விலக்கல் வேண்டும்.
திருமகன்-திருமாள்- ஸ்ரீமத் (வ.) - ஸ்ரீமதீ (பெண்பால்)
திருமதி- ஸ்ரீமதீ, திருவாட்டி என்னும் தூய தென்சொல்லை
நீக்கிவிட்டுத் திருமதி என்னும் இருபிறப்பியை ஆள்வது,
"பேதைமை யென்பதொன் றியாதெனின் ஏதங்கொண்
டூதியம் போக விடல்"
(குறள்.
831)
என்னும் திருக்குறட்கே எடுத்துக்காட்டாம். ஒருகால், திருமதி
என்பதன் ஈற்றை அறிவுப் புலனைக் குறிக்கும் தென்சொல்லாகக் கருதிக்கொண்டனர் போலும்! அறிவுத்
திறனைக் குறிக்கும் மதி என்னும் தென்சொல் வேறு; பெண்பாலுணர்த்தும் மதீ என்னும் வடமொழியீறு
வேறு.
இனி மதிப்படைச் சொற்கள், (1) முன்னடைச் சொற்கள்,
(2) பின்னடைச் சொற்கள் என இரு வகைய.
கண்ணியம் வாய்ந்தவர் பெயருக்குப் பின், 'அவர்கள்' என்று
குறிப்பது பின்னடைச் சொல்லாகும். அது, உயர்வுப்பன்மை. அதற்கு ஒருமையும் பன்மையும் இல்லை.
எ-டு: திரு. மாணிக்கவேல் செட்டியார் அவர்கள்.
ஆற்றலும் தேர்வுப்பட்டமும்
புலமையும் தொழிலும் குறித்து வரும் சொற்கள் முன்னடையாக
வரின் வேறடை தேவையில்லை.
எ-டு: பண்டிதமணி கதிரேசன்
செட்டியார்,
புலவர் சின்னாண்டார்,
பேராசிரியர்
சொக்கப்பனார்,
மருத்துவர் கண்ணப்பர்.
நாவலர் வேங்கடசாமி நாட்டார்,
|