பக்கம் எண் :

மதிப்படைச் சொற்கள்5

பு

        புதுப்புனைவர் கோ. துரைச்சாமி நாயக்கர் (G.K.நாயுடு),
        பண்டாரகர்
(Dr) சாலை இளந் திரையனார்.

    பேராசிரியர் என்பதைப் பேரா. என்று குறுக்கலாம். சில சொற்கள் முன்னடையாகவும் பின்னடையாகவும் ஆளப் பெறும்.

    எ-டு : புலவர் புகழேந்தியார்,  புகழேந்திப் புலவர்,
         பெரியார் ஈ.வே.இரா.   ஈ.வே.இராப். பெரியார்.

    'அவர்கள்' என்னும் பின்னடையை எவர் பெயருக்கும் பின் குறிக்கலாம். அது எழுதுவாரின் நிலைமையையும் விருப்பத்தையும் பொறுத்தது.

    அரசினர் வழங்கும் பட்டங்களான அடைச்சொற்களைப் பின் வருமாறு மொழிபெயர்க்கலாம்.

எ-டு:  பத்மஸ்ரீ: தாமரைத்திரு வ. சுப்பையாப் பிள்ளை அவர்கள்.
     செர்
(Sir) : வயவர் தியாகராசச் செட்டியார் அவர்கள்
     ராஜா செர்
(Rajah Sir): அரசவயவர் முத்தையாச் செட்டியார் அவர்கள்.
     ராய் பஹதூர்: அரைய ஆண்டகை.
     ராவ் பஹதூர்: அராவ ஆண்டகை பவானந்தம் பிள்ளை அவர்கள்.
     திவான் பஹதூர்: அமைச்ச ஆண்டகை நாராயணசாமிப் பிள்ளை அவர்கள்.
     ராவ் சாஹிப்: அராவ அண்ணல் கோதண்டபாணிப் பிள்ளை அவர்கள்.

அரசியற் பதவிகள் பற்றிய முன்னடைகள்

 

The Hon'ble

-

பெருந்தகை

 

The Rt. Hon'ble 

-

மா பெருந்தகை

 

His Worship

-

வணங்கு தகை

 

His Lordship

-

குரிசில் தகை

 

His Excellency

-

மேன்மை தங்கிய

His Highness

-

உயர்வு தங்கிய

 

His Majesty 

-

மாட்சிமை தங்கிய

மதவியல் பற்றிய முன்னடைகள்

 

Rev. 

-

கனம்

 

Rt. Rev.

-

மா கனம்

 

His Grace

-

அருட்டிரு

 

His Holiness

-

தவத்திரு

- “முதன்மொழி” 2.9.1971