ஏ
ஏ - ஏவு. ஏவுதல் = செலுத்துதல்,
தூண்டுதல், தூண்டிக்
கட்டளையிடுதல்.
ஏ - ஏவு - ஏகு. ஏகுதல் = போதல்.
ஒ.நோ : போ - போவு
- போகு.
ஏ - யா - யாத்திரை = செலவு.
தகடூர் யாத்திரை = தகடூர்ச்
செலவு. ஒ.நோ : மா - மாத்திரை. மாத்தல் = அளத்தல். இதுவும்
ஒரு வழக்கற்ற வினை.
ஏகாரம் யாவாகத் திரிதலை,
ஏன் - யான், ஏ - யா, ஏது - யாது,
ஏனை - யானை, ஏமை - யாமை, ஏமம் - யாமம் - சாமம்
முதலிய
சொற்றிரிபுகளான் அறிக.
யா-ஜா (மராட்டி, குசராத்தி,
இந்தி, வங்கம்).
யாத்திரை - யாத்ரா - ஜாத்ரா.
மராட்டியும் குசராத்தியும் பழம்
பஞ்ச திரவிடம்; இந்தியும் வங்கமும் வடதிரவிடமாகிய முன்வடமொழி (பிராகிருதம்).
ய - ஜ, போலித் திரிபு.
எ-டு : யோகி (வ.) -
ஜோகி (இ.),
யுவன் (வ.) - ஜவான்(இ.),
யௌவனம்(வ.) -
juveni (L.)
ஜா -
ga. OE, OS. gan, OHG. gan, gen, E. go, Skt ga (to go), gatu (going).
சகரம் ககரமாகத் திரிதலால்,
ஜகரம் ககரத்தின் எடுப்பொ லியாக
'g' என்று திரியும்.
வடதிரவிட வழிப்பட்ட இந்தியிலேயே,
போதலைக் குறிக்கும் வினைச்சொல்லின் ஜகரம், இறந்த காலத்திற் ககர எடுப்பொலி (ப) ஆகி
விடுகின்றது.
எ-டு : |
ஜா = போ. ஜாத்தா ஹை = போகின்றான். |
|
ஜாவேகா
(javega)
= போவான். |
|
கயா
(gaya) = போனான். |
வடமொழி என்னும் சமற்கிருதத்தில்,
ga என்னும் முதனிலை
ga என்று குறுகியும்
gam என்று திரிந்தும்,
gati, gama, gamana என்னும்
வினைப்பெயர்களைப் பிறப்பிக்கும்.
கம்
(gam)
என்னும் முதனிலை 'ஆ' என்னும் எதிர்மறை முன்னொட்டொடு சேர்ந்து, செல்கைக்கு எதிரான
வருகையைக் குறிக்கும் ஆகம
(agama)
என்னும் வினைப்பெயரையும் வினையாகு
|