New Page 1
பெயரையும் தோற்றுவிக்கும். ஆகம
என்னும் வடசொல், தமிழில் ஆகமம் என்று மகரமெய்யீறு கொடுத்துக் குறிக்கப்படும்.
'ஆ' என்னும் எதிர்மறை
முன்னொட்டு, அகர எதிர்மறை முன்னொட்டின் நீட்டமே.
அல் - அ - ஆ. ஒ.நோ : நல் -
ந.
இங்ஙனம், ஆகார எதிர்மறை
முன்னொட்டுச் சேர்க்கையால் எதிர்வினைச்சொற்களைப் படைப்பது சமற்கிருத இயல்பே.
கம் = போ. ஆகம் = வா.
தா = கொடு. ஆதா = கொள்,
வாங்கு.
சமற்கிருதம், தன்னில் ஐந்தி
லிருபகுதியை முழுச்சொற் கடனாகவும், வேறோர் ஐந்திலிருபகுதியை
வேர்ச்சொற் கடனாகவும், தமிழினின்று கொண்டுள்ளதென்பதை, 'எது தேவமொழி?' என்னும்
பகுதியிற் காண்க.
'திரு நான்மறை விளக்க
ஆராய்ச்சி'க்கு மதிப்புரை வழங்கிய வருள் ஒருவரான, தஞ்சைச் சீனிவாசப் பிள்ளை,
"ஸ்ரீமான் கா. சுப்பிரமணியப்
பிள்ளை யவர்கள், நல்ல குலத்தில் பிறந்தவராயிருந்தும் இந்த நான்மறை விளக்கம் எழுதி
யிருப்பது, கலியுகக் கூத்துகளில் ஒன்று தோன்றுகிறது. அசஞ்சல சிவபக்தியில் சிறந்த
குடும்பத்தில் தோன்றிய ஸ்ரீமான் சாம்பசிவம் பிள்ளையவர்கள், மேலே கண்ட ஆராய்ச்சி என்னும்
நூலை எழுதியிருப்பது, சைவர்கள் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியது" என்று
வரைந்திருப்பது, ஆரியர்க்கு அடிமையராயிருப்பவரே நல்ல குலத்தாரென்றும் நல்ல சிவனிய ரென்றும்
பொருள்படுவதாயுள்ளது. இதை அவர்தம் 'தமிழ் வரலாறு' மறுபதிப்பில் வெளியிடாது போயினர்.
இத்தகைய நல்ல குலத்தாரும் நல்ல
சிவனியரும் இருந்ததனால் தான், சின்னமனூர்த் தேவார ஊர்வலம் பிராமணத் தெருவில்
தடுக்கப்பட்டதும், அதுபற்றித் தொடர்ந்த வழக்கில் பிராமண முறையாளி பிராமணச் சார்பாகத்
தீர்ப்புக் கூறியதும் ஆகும்.
'மகேந்திரம்' என்னும் முடியைக் கொண்ட குமரிமலைத் தொடரின் வடபகுதி மூழ்கிய பின்னரே,
கஞ்சம் மாவட்டத்திற் சிவன் கோவில் கொண்டுள்ள மலை மகேந்திரம் என்று பெயர்
பெற்றிருத்தல் வேண்டும். "மந்திர மாமலை மகேந்திர வெற்பன்" என்னும் திருவாசகத் தொடரில்
(2:100) மாணிக்கவாசகர் குறித்துள்ள மலை,
|