பக்கம் எண் :

தமிழர் மதம் 109

உள

உளதேயோ" என்று பாடிய மாதவச் சிவஞான முனிவர் தொடர் பாலும்; சோறு என்னும் தூய தமிழ்ச்சொல்லைச் சொன்னதற்காக ஒரு புலவரையடித்த குட்டித் தம்பிரானை, பெரிய தம்பிரானார் விலக்கிவிட்ட நிகழ்ச்சியாலும், திருவாவடுதுறை மடம் சிறப்புற்றதே. ஆயினும், தமிழைப் போதிய அளவுபோற்றாதது வருந்தத் தக்கதே.

தருமபுர மடம்

    கோவிற் பூசகர் பதவிக்குப் பிராமண மாணவரையே இலவச ஊணுடையுறையுள் அளித்து ஆரிய மந்திரங்களிற் பயிற்றுவதும், வினைதீர்த்தான் (வைத்தீசுவரன்) கோவிற் கும்பமுழுக்கு விழாவிற்கு, ஒரு மாதக் காலமாக நூற்றுக்கணக்கான வேதியரைக் கொண்டு வேத மந்திரங்களை ஓதுவித்தது, ஆரியத்தை நிலைநாட்டும் 'வருணாஸ்ரம சந்திரிகை', 'சித்தாந்த சைவ வினா விடை', 'சித்தாந்தத் தெளிவியல்' முதலிய பல பொத்தகங்களை வெளியிட்டு வருவதும், தமிழ மாணவரைத் தாழ்வாக நடத்தியதும், பிறவும், ஆரியம் தருமை மடத்தில் அடைக்கலம் புகுந்தது மட்டுமன்றித் தலைவிரித்தும் ஆடுகின்றது என்னுமாறுள்ளன. முந்திய தம்பிரான் ஒருவர் சமற் கிருதத்திற் கையெழுத்திடுவதே வழக்கம் என்றும் சொல்லப்படுகின்றது.

    "குண்டாசுர னென்னும் ஓரசுரன் கொக்கு ரூபமாயிருந்து அண்டமனைத்துங் கொறித்துக் கொறித்து, தேவர்களை வருத்தி வந்தமையால் சிவபெருமான் அவனைச் சம்ஹாரம் செய்து அவனது இறகையணிந்தருளினார்." (ப. 94) என்னும் கொக்கிற கணிவிளக்கம் ஒன்றே, 'சித்தாந்த சைவ வினா விடை'யின் சிறப்பை விளக்கப் போதிய சான்றாம்.

    "வைதிக முறைப்படி உபநயனமும் சிவாகம முறைப்படி சமயம், விசேடம், நிர்வாணம் என்னும் தீட்சைகளும் பெற்று, ஆச்சாரியாபிடேகம் செய்துகொண்டு சைவக் குருமார்களாய் விளங்குபவர்கள், ஆதி சைவர் எனப்படும் சிவமறையோர். 'சிவா சாரியார்' என்று சொல்லப்படும் இவர்கள், சிவபெருமானைச் சிவாகமங்களின்வழித் தம் இல்லங்களில் ஆன்மார்த்தமாகவும், சிவாலயங்களில் பரார்த்தமாகவும் பூசை செய்பவர்கள். சிவாலயங் களில் நித்திய நைமித்திகங்களாகிய பூசைகளையும் விழாக் களையும் நடத்துபவர்கள்." (ப. 11).

     "வேதம்பசுஅதன்பால் மெய்யாக மம்நால்வர்  
      ஓதும் தமிழ்அதனின் உள்ளுறுநெய் - போதமிகும்  
      நெய்யின் உறுசுவையாம் நீள்வெண்ணெய் மெய்கண்டான்  
      செய்ததமிழ் நூலின் திறம்" (ப. 33)