பக்கம் எண் :

110தமிழர் மதம்

New Page 1

    "உலகம் சொல்வடிவம் பொருள்வடிவம் என இருவகையாய் உள்ளது. சொல் உலகம் 'சத்தப் பிரபஞ்சம்' எனவும், பொருள் உலகம் 'அர்த்தப் பிரபஞ்சம்' எனவும் சொல்லப்படும்.

    "அவற்றுள் சொல் உலகம், எழுத்துகளை உறுப்பாகக் கொண்ட சொற்களும் சொற்றொடர்களுமாம். எழுத்துகள் 'வன்னம்'(வர்ணம்) என்றும், சொற்கள் 'பதம்' என்றும் வட மொழியிற் சொல்லப்படும். சொற்றொடர்களில் சிறப்புடையன மந்திரங்கள். அதனால், 'மந்திரம், பதம், வன்னம்' எனச் சத்தப் பிரபஞ்சம் மூவகையாகச் சொல்லப்படும். வடமொழி மரபும் சைவ மரபும்பற்றி, 'வன்னம் ஐம்பத்தொன்று, பதம் எண்பத்தொன்று, மந்திரம் பதினொன்று' எனச் சிவாகமங்கள் வரையறை செய்கின்றன. இங்குக் கூறப்பட்ட எழுத்து சொல் சொற்றொடர்களில், எல்லா மொழிகளிலும் உள்ள எழுத்துகளும் சொற்களும் நூல்களும் அடங்கும் என்பது சிவாகமங்களின் கொள்கை."

    "சத்தப் பிரபஞ்சம் அறிவுக்குக் காரணமாய் நிற்றலின், அது சுத்த மாயையின் காரியமே யாகும். ஆகவே, சுத்த மாயையின் காரியமே சொற் பிரபஞ்சம், பொருட் பிரபஞ்சம் என இருவகையா கின்றது. அசுத்த மாயையின் காரியங்களும், பிரகிருதி மாயையின் காரியமும், பொருட் பிரபஞ்சம் ஒன்றேயாதல் அறிந்துகொள்க."    (ப. 180) என்னும் பகுதிகள், 'சித்தாந்த தெளிவியல்' எத்துணைக் கொண் முடிபு  மயக்கியல் என்பதைத் தெரிவிக்கும்.

    பூணூ லணிவு, தமிழ வாழ்க்கைமுறைக்கும் சிவநெறி யொழுக் கத்திற்கும் புறம்பான, பொருளற்ற ஆரிய வழக்கம். ஆதிசைவர் அல்லது முந்து சிவனியர் என்று சொல்லப்படத் தக்கவர் ஓதுவார். பண்டாரம், புலவர், குருக்கள் என்னும் வகுப்புகளைச் சேர்ந்த தமிழப் பூசகரே.

    வேதத்திற்கும் சிவநெறிக்கும் யாதொரு தொடர்புமில்லை.

    எழுத்து சொல் சொற்றொடர் என்பவற்றின் இயல்பு முன்னரே விளக்கப்பட்டது. மொழித்துறைபற்றிய ஆரியக் கொள்கை அறியாமையின் விளைவாகும். சிவநெறி தோன்றிய மொழி தமிழாதலால், எழுத்தெனப் படுவன  முப்பதே. பல்வேள்விச் சாலை முதுகுடுமிப் பெருவழுதி காலத்திலேயே, ஆரியக் கொள் கைகள் சிவனியக் கொண்முடிபிற் கலந்துவிட்டதனால், ஏழு அல்லது எட்டு நூற்றாண்டுகட்குப் பின் தோன்றிய திருமூலர், அவற்றை அங்ஙனமே மேற்கொண்டு விட்டார்.

திருப்பனந்தாள் மடம்

    திருப்பனந்தாள் மட மூலவரான குமரகுருபரர்,