பக்கம் எண் :

124தமிழர் மதம்

சமற

சமற்கிருத வண்ணமாலை

    வேத ஆரியர் ஆடுமாடு மேய்க்கும் முல்லை நாகரிக நிலையில் இந்தியா வந்து சேர்ந்தார்கள். வேதம் ஏற்பட்ட பின்பும், நீண்ட நாள் அவர்கள் எழுத்தில்லாதிருந்தனர். அவர்கள் வேதம் வாய்மொழியாகவே வழங்கி வந்ததால், எழுதாக்கிளவியெனப் பட்டது. சமற்கிருதம் தோன்றிய பின்னரே, தமிழ் நெடுங் கணக்கைப் பின் பற்றிய வண்ண மாலை, முன்பு கிரந்த எழுத்திலும், பின்பு தேவநாகரியிலும்  அமைக்கப்பட்டது.

சமற்கிருதச் சொற்கள்

(1) சுட்டுச்சொற்கள்

    திரவிடத்திற் போன்றே ஆரியத்திலும், சுட்டுச்சொற்கள் அ, இ, உ என்னும் முத்தமிழ்ச் சுட்டெழுத்துகளையே மூலமாகக் கொண்டன.

    தமிழ்ச் சுட்டெழுத்துகள் சமற்கிருதத்திற்கு முந்தியவை யென்றும், ஆரியத்தின் மூல மொழியொடு தொடர்பு டையனவென்றும், கால்டு வெலார் தேற்றமாகக் கூறியிருத் தலைக் காண்க.

    சமற்கிருதச் சொற்கள், திரிசொற்க ளாதலால், ஓரெழுத்துச் சொல்லாயிராது பலவெழுத்துச் சொல்லாகவே யிருக்கும்.

     எ-டு : அதஸ் = அது, அப்படி, அங்கே.
   
  இஹ  = இங்கே, இவ்விடத்தில், இவ்வுலகில்.

    சில சுட்டுச்சொற்கள் இடமாறிச் சுட்டும்.

     எ-டு : அத்ர = இங்கே, அதுனா = இப்பொழுது.

    சில சுட்டுச்சொற்கள் சேய்மையண்மை யிரண்டையும் சுட்டும்.

     எ-டு : அத்தஸ் (atas) = அதனால், இதனால்

    இகரச் சுட்டு ஏகார மாகவும் திரியும்.

     எ-டு : ஏதத் (etad) = இது, இங்குள்ளது, இங்கு.
   
  ஏவம் = இப்படி