த
திருப்பாற்கடல் கடைந்து வெண்ணெ
யெடுத்ததாகக் கதை கட்டி விட்டனர். அக் கதையிற் பகுத்தறிவிற் கொவ்வாத பல செய்தி களிருத்தல்
காண்க.
வேதப் பெயர்கள்
வேதமொழியிலும் சமற்கிருதத்திலும்
நூற்றுக்கணக்கும் ஆயிரக் கணக்குமான தமிழ்ச்சொற்கள் இருப்பதுடன், வேதத்தின் பெயர்களும் தென்சொல்
திரிபாகவே உள்ளன.
விழித்தல் = கண் திறத்தல், பார்த்தல், அறிதல்.
விழி = அறிவு,
ஓதி (ஞானம்).
"விழக்கண்டுந் தேறார்
விழியிலா மாந்தர்" |
(திருமந்.) |
விழி -
L. vide, OS.
wit, Goth. wit. ON. vit, Skt. வித் - வேத
=அறிவு,
அறிவுநூல், மறை.
செவியுறுதல் = கேட்டல். செவியுறு - ச்ரு - ச்ருதி =
கேள்வி,
எழுதாக் கிளவியாய்க் கேட்டறியப்பட்ட
ஆரிய மறை.
வேதப் பிரிவின் பெயரான மண்டலம்
என்பதும் தென் சொல்லே.
மண்டுதல் = வளைதல். மண்டு - மண்டி.
மண்டியிடுதல் = காலை வளைத்து நிற்றல் அல்லது இருத்தல். மண்டு - மண்டலம் = வட்டம், நாட்டுவட்டம்,
காலவட்டம், வட்டமான பொருள், நூற்பிரிவு. மண்டலம் - மண்டிலம். என் 'வடமொழி வரலாறு'
பார்க்க.
"மூன்றன் பகுதியும் மண்டிலத்
தருமையும்" |
(தொல்.
அகத். 41) |
தொண்டைமண்டலம், கொங்குமண்டலம்
என்பன தொன்மையான நாட்டுப் பெயர்கள்.
மண்டலம் - மண்டலி. மண்டலித்தல்
= வட்டமிடுதல், பாட்டின் எல்லா அடிகளும் அளவொத்திருத்தல்.
"மண்டிலம் குட்டம் என்றிவை யிரண்டும்" |
(தொல். செய். 116) |
வட்டமிடும் அல்லது வட்டமாயிருக்கும்,
பாம்பு, நச்சுப்பூச்சி முதலிய உயிரிகளும், நரப்பிசைக் கருவிகளும், மண்டலம் அல்லது மண்டலி
எனப் பெயர் பெற்றுள்ளன.
மந்திரம் முதன் முதலாகத் தோன்றியது
தமிழிலேயே.
"மந்திரப் பொருள்வயின் ஆஅ
குநவும்"
|
(தொல். எச்ச. 53) |
|