New Page 1
"பிராமணனுக்கு க்ஷத்திரிய வைசிய
ஸ்திரீகளிடத்திற் பிறந்த வர்கள், எப்படி உபநயந முதலியவற்றிற்குரியர்களா யிருப்பதால்
உயர்ந்திருக்கிறார்களோ, அப்படியே வைசியனுக்கு க்ஷத்திரிய ஸ்திரீ யிடத்திலும் க்ஷத்திரியனுக்குப்
பிராமண ஸ்திரீயிடத்திலும் பிறந்த புத்திரர்கள், சூத்திரனுக்கு வைசிய க்ஷத்திரிய பிராமண ஜாதி
ஸ்திரீயிடத்திற் பிறந்தவர்களைக் காட்டிலும் உயர்ந்தவர்கள்." (மநு. (மொழி பெயர்ப்பு) 10
: 28).
மூவேந்தரும் பிராமணர்க்கு முழு
அடிமையராய்ப் போன தற்கு, பிராமணப் பெண்நுகர்ச்சியும் கரணியமா யிருந்திருக்கலாம்.
பண்டை முறைப்படி தமிழிலேயே திருக்கோவில்
வழிபாடு செய்து வந்த குருக்கள் என்னும் தமிழ வகுப்பார், ஆரிய மந்திரங் களைக் கற்றுக் கொண்டு
சமற்கிருதத்தில் வழிபாடு நடத்தி இந் நூற்றாண்டிற் பிராமணராக மாறிவிட்டதாகவும் சொல்லப்படுகின்றது.
பிராமணர் என்றும் தம் மேம்பாட்டை
நிலைநிறுத்தி இன்புற்று வாழ விரும்பியதால், தம்மின வுயர்த்தத்தைப் பேணுவதிற் கண்ணுங்
கருத்துமாயிருந்து வந்திருக்கின்றனர்.
இறையடியா ரென்று சிறப்பித்துச்
சொல்லப்படுபவர், செயற்கரிய செயல் செய்த தெய்வப் பற்றாளரே.
வாளான்
மகவரிந் தூட்டவல் லேனல்லன் மாதுசொன்ன |
சூளா லிளமை துறக்கவல் லேனல்லன்
தொண்டுசெய்து |
நாளாறிற் கண்ணிடத் தப்பவல் லேனல்லன் நானினிச்சென்
|
றாளாவ தெப்படி யோதிருக் காளத்தி யப்பனுக்கே." |
(திருத்தில்லை,3) |
என்று பட்டினத்தார் மனம் வருந்திப்
பாடியுள்ளார்.
'திருத்தொண்டத் தொகை' பாடிய
சுந்தரமூர்த்தி நாயனார், "தில்லைவா ழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" என்று தொடங்கியிருக்கவே
வேண்டியதில்லை. தில்லைவாழந்தணர் பிராமணரே யன்றித் தமிழ் முறைப்படி அந்தணரு மல்லர்;
அவருள் ஒருவரேனும் செயற்கரிய பத்திச்செயல் செய்தது மில்லை. மூவேந்தரும், சிறப்பாகச் சோழவேந்தர்,
விட்ட மானியங்களையும் இட்ட காணிக்கைகளையுங் கொண்டு, ஒரே கோயிலில் மூவாயிரவர் இருந்து உண்டு
கொழுத்துச் சோம்பேறித் தனமாய் வாழ்ந்து வந்தவர். பொன்னம்பலப் பூசகரைப் போற்றுவதெனின்,
வெள்ளி யம்பலம் செப்பம்பலம் முதலிய ஏனையம்பலப் பூசகரையும் போற்று தல் வேண்டும். அது
பொருந்தாக்கால், பொன்னம்பலப் பூசகரையும் போற்றுதலும் பொருந்தாது.
|