(4) |
சிவபெருமானின் அறுபத்து நான்கு
திருவிளையாடல்களும்,
செந்தமிழ்ப் பாண்டிநாட்டுத் தலைநகராகிய மதுரையில்
நிகழ்ந்தமை. |
|
|
(5) |
சிவபெருமானின் எண் மறச்செயலகமும்
(அட்ட வீரட்டம்) தமிழ்நாட்டிற்குள்ளிருத்தல். |
|
|
|
"பூமன் சிரங்கண்டி யந்தகன் கோவல்
புரமதிகை |
|
மாமன் பறியல் சலந்தரன் விற்குடி
மாவழுவூர் |
|
காமன் குறுக்கை யமன்கட வூரிந்தக்
காசினியில் |
|
தேமன்னு கொன்றையுந் திங்களுஞ்
சூடிதன் சேவகமே." |
|
|
(6) |
சிவன் நடஞ்செய்யும் அம்பலம்
ஐந்தும் தமிழ்நாட்டிலிருத்தல். |
|
|
(7) |
முருகனும் சிவனும் வேதத் தெய்வமன்மை. |
|
|
(8) |
உருத்திரன், இந்திரன், அக்கினி
ஆகிய மூவர்க்கும் வேதத்தில்
வந்துள்ள 'சிவ' என்னும் அடைமொழி, நல்ல அல்லது
மங்கல என்றே
பொருள்படுதல். |
|
|
(9) |
வேத ஆரியர், வடநாட்டுச்
சிவனியரை, சிவக்குறி வணக்கம்
பற்றி ஆண்குறி வணக்கத்தார்(சிச்ன தேவா) என்று பழித்தமை. |
|
|
(10) |
ஆயிரத்தெண் சிவத்திருப்பதிகளுள்,
ஒருசிலவே வடநாட்டிலிருத்தல். |
|
|
(11) |
கல்லாலமர நிழலில் நால்வர்க்குத்
திருமறை கற்பித்த திருவாசி
ரியனைத் தென்முக நம்பி (தக்ஷிணாமூர்த்தி) எனல். |
|
|
(12) |
சிவன் என்னும் சொல் செவ்வண்ணன்
என்று பொருள்படுதலும்,
சிவனுக்கு அழல் வண்ணன், அந்திவண்ணன், மாணிக்கக்
கூத்தன் என்னும் பெயர்களுண்மையும். |