பக்கம் எண் :

146தமிழர் மதம்

     நாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும்  
     யாப்பின் வழிய தென்மனார் புலவர்." (தொல்.  1336)
   
    "எழுநிலத் தெழுந்த செய்யுள் தெரியின்  
     அடிவரை யில்லன ஆறென மொழிப." (தொல். 1420)
   
    "அவைதாம்,  
     நூலி னான உரையி னான  
     நொடியொடு புணர்ந்த பிசியி னான  
     ஏது நுதலிய முதுமொழி யான  
     மறைமொழி கிளந்த மந்திரத் தான  
     கூற்றிடை வைத்த குறிப்பி னான." (தொல். 1421)
   
    "நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த  
     மறைமொழி தானே மந்திரம் என்ப" (தொல். 1434)

என்பவற்றால், ஆரியர் வருமுன்பே, தனித்தமிழ் மறைநூல்களும் மந்திர நூல்களும் குமரிநாட்டில் தோன்றியிருந்தன வென்பது, தெள்ளத் தெளிவாம். இவற்றையே பேரா. கா.சுப்பிரமணியப் பிள்ளை தம் 'திருநான்மறை விளக்க' வுரையிற் குறிப்பிட்டார்.

    பண்டைத் தனித்தமிழ் மறைகளும் மந்திர நூல்களும் பிற நூல்களுடன் ஒருங்கே அழிக்கப்பட்ட பின், பிராமணரும் அவரைக் குருட்டுத்தனமாய்ப் பின்பற்றிய தமிழரும், ஆரிய வேதங்களையே பொதுமறையாகப் போற்றி வந்தனர். கிறித்துவிற்கு முற்பட்ட முதுகுடுமிப் பெருவழுதி காலத்திலேயே வேரூன்றிய ஆரியக் கொள்கைகளும் ஒழுகலாறுகளும், கி.பி. 3ஆம் நூற்றாண்டில் மாணிக்க வாசகர் காலத்தில் ஆழ வேரூன்றிவிட்டன. அதனால், அவருக்குப் பின் ஐந்தாம் நூற்றாண்டிலெழுந்த ஆரிய ஆகமங் கள், இம்மியும் ஐயுறவும் எதிர்ப்புமின்றித் தெய்வவுரைபோல் எழுத்துப் படி நம்பப்பட்டுவிட்டன.

    வரலாற்றையும் தமிழியல்பையும் அறியாத சில குருட்டுச் சிவனியர், வடசொல் வழக்கையே அடிப்படையாகக் கொண்டு, சிவனியம் ஆரிய வழிப்பட்ட தென்றும், திருக்கோவில்களில் சமற்கிருத வழிபாடே நடைபெறல் வேண்டுமென்றும், பிதற்றி வருவ தால், இற்றை ஆரிய மதவியற் சொற்கட்கெல்லாம் நேர்த் தென் சொற்கள் கீழே வரையப்பட்டுள்ளன. சொல் வரலாறு வரையப் படாத இடங்களில், இடைக்கோட்டின், இடப்புறம் உள்ளன வெல்லாம் சமற்கிருதச் சொல்லென்றும், வலப்புறம் உள்ளன