சடலம
சடலம் - சதரம் = உடம்பு (பாண்டிநாட்டு
வழக்கு).
சதரம் - வ. சரீர.
பதி லக்ஷணம் - தலைவன் (இறை) இலக்கணம்.
தலைவன் = 1. முதல்வன். "கயிலாய
மென்னும் மலைத் தலைவா" (திருவாச. 6 : 40). 2.கடவுள். "தலைவன் காக்கும்" (மணிமே. 21 :
63).
சொரூபம் - தன்னியல்பு. தடத்தம்
- சார்பியல்பு. சொரூபசிவன் -பரமசிவன், இயனிலைச் சிவன், தன்னியற் சிவன். தடத்த சிவன்
-செயனிலைச் சிவன், சார்பியற் சிவன்.
சிவ வுருவம் (9): சிவம் - சிவம்,
சத்தி-ஆற்றல், விந்து - விழியம், நாதம் - ஓதை, சதாசிவன் - அருளாளன், மகேசுரன் - பேரிறைவன்,
ருத்திரன் - உருத்திரன், அரி - மால், அயன்-நான்முகன்.
லயம் - ஒடுக்கம். போகம் - நுகர்வு.
அதிகாரம் - அதிகாரம்.
அரூபம் - உருவிலி. ரூபாரூபம் -
உருவ வுருவிலி. ரூபம் - உரு, உருவு, உருவம்.
உருத்தல் = தோன்றுதல்.
உரு = தோற்றம், வடிவு, வடிவுடைப் பொருள். உரு - உருவு - உருவம். உருவு - உருபு = வேற்றுமை வடிவான
சொல் அல்லது எழுத்து. உருவம் - வ. ரூப. அ + ரூப = அரூப. அல் - அ. அல் - அன்
(அந்) - வ. ந (முறை மாற்று -
metathesis).
பராசக்தி - பரையாற்றல். ஆதிசக்தி
- முந்தையாற்றல். இச்சா சக்தி - விருப்பாற்றல். ஞானசக்தி - அறிவாற்றல். கிரியாசக்தி -
வினையாற்றல்.
அத்துவித சம்பந்தம் - இருபொரு
ளொருமைத் தொடர்பு. தாதான்மிய சம்பந்தம் - ஒருபொரு ளிருமைத் தொடர்பு.
வித்தியேசுவரன் - அறிவாண்டான்.
அனந்தன் - ஈறிலி. சீகண்ட ருத்திரன் - மணிமிடற் றுருத்திரன்.
பதிஞானம் - இறையறிவு.
பசு லக்ஷணம் - ஆதல னிலக்கணம்.
விஞ்ஞான கலர் - தலைமாசர். பிரளயாகலர்
- இடைமாசர். சகலர் - கடைமாசர்.
அவஸ்தை - நிலை (5) : சாக்கிரம்
- நனவு, சொப்பனம் - கனவு, சுஷு த்தி - உறக்கம், துரியம் - அயர்வுறக்கம், துரியாதீதம் -
உயிர்ப் படக்கம்.
|