பக்கம் எண் :

150தமிழர் மதம்

ஆவ

    ஆவார சக்தி-மறைப்பாற்றல். அதோ நியமிகா சக்தி - கீழுறுத் தாற்றல். ஆகந்துகம்-வந்தாரி.

    பந்தம் - கட்டு (3) : பிரதிபந்தம் - எதிர்க்கட்டு, அனுபந்தம் -துணைக்கட்டு, சம்பந்தம் - தொடர்புக்கட்டு.

    பாவம் - தீவினை, கரிசு, அறங்கடை. புண்ணியம்-அறப்பயன். பாவம், புண்ணியம் என்னும் இருசொல்லும் மேலை யாரிய மொழி களில் இன்மையால், வடநாட்டுச் சொல்லே; சமற்கிருதமல்ல.

    மானதம் - மனவிகம். வாசிகம் - உரையிகம். காயிகம்-மெய்யிகம்.

    சஞ்சித கர்மம் - இறந்தகால வினை. பிராரத்த கர்மம் - நிகழ் கால வினை. ஆகாமிய கர்மம் - எதிர்கால வினை.

    நாசோற்பத்தி - நசிவு தோற்றம். பிரவாக நித்தம் - ஆற்றொ ழுக்கு நித்தம். நில் - நிற்றம் - நித்தம் - வ. நித்ய.

    பஞ்ச கஞ்சுகம் - ஐஞ்சட்டை. பஞ்சகோசம் - ஐயுறை. அன்ன மய கோசம் - உணவிய லுறை. பிராணமய கோசம் - மூசவிய லுறை. மனோமய கோசம் - மனவிய லுறை. விஞ்ஞானமய கோசம் - புலம விய லுறை. ஆனந்தமய கோசம் -  மகிழிய லுறை. (புலம் - புலமம்  =  சாஸ்திரம், விஞ்ஞானம்).

    தூலம் - பருமம். சூக்குமம் (புரியட்டம்) - நுண்மம். பரம் - பரம். (புரம் - பரம் - வரம் - வரன்).

    நிர்விகற்ப ஞானம் - பொதுப்படை யுணர்வு.

    சவிகற்ப ஞானம் - வேறுபாட் டுணர்வு.

    சாதனம் - வாயில். சரியை-தொண்டு. கிரியை - வழிபாடு. யோகம் - ஓகம், ஒன்றம். ஞானம் - அறிவம், ஓதி.

    தாச மார்க்கம் - அடிமைநெறி. சற்புத்திர மார்க்கம் - நன்மக நெறி. சகமார்க்கம் - தோழமை நெறி. சன்மார்க்கம் - நன்னெறி.

    அட்டாங்க யோகம்-எண்ணுறுப்பு ஓகம்.

    இயமம் - அடக்கம், நியமம் - ஒழுங்கு, ஆசனம்-இருக்கை, பிராணாயாமம் - வளிநிலை, பிரத்தியாகாரம் - ஒருக்கம் (தொகை நிலை), தாரணை - நிறை, தியானம் - ஊழ்கம், சமாதி - நொசிப்பு (பள்ளியடை).

    சடாதாரம்   -  அறுநிலைக் களம்

    மூலாதாரம்  -  அடிமூலம், நாலிதழி