பக்கம் எண் :

18தமிழர் மதம்

New Page 1

    தே - தீ = 1. நெருப்பு. "வளித்தலைஇய தீயும்" (புறம். 2). 2. விளக்கு. "தீத்துரீஇ யற்று" (குறள். 929).  3. வயிற்றுத் தீயாகிய கடும்பசி. "வயிற்றுத்தீத் தணிய" (புறம். 74). 4. தீப் போன்ற சினம் "மன்னர்தீ யீண்டுதங் கிளையோடு மெரித்திடும்" (சீவக. 250). 5. தீயின் தன்மை, தீமை. "தீப்பால தான்பிறர்கட் செய்யற்க" (குறள். 206). 6. நஞ்சு. "வேகவெந் தீநாகம்" (மணிமே. 20 : 98). 7. நரகத்தீ. "தீயுழி யுய்த்துவிடும்" (குறள். 168).

    தே - தீ. ஒ.நோ: தேன்சுவை - தேஞ்சுவை - தீஞ்சுவை.

    தேய் - தெய் = தெய்வம் (பிங்.).

    தேய் - தேய்வு - தேவு = 1. தெய்வம் (பிங்.). "நரகரைத் தேவு செய்வானும்" (தேவா.  696 : 2 ). 2. தெய்வத் தன்மை.

    தேவு - தேவன் = கடவுள். "ஒருவனே தேவனும்" (திருமந். 2104). தேவன் - வ. தேவ.

    தேய்வு - தெய்வு - தெய்வம் = 1. வணங்கப்படும் பொருள். "தெய்வ முணாவே" (தொல். பொருள். 18). 2. தெய்வத்தன்மை. 3. தெய்வத்தன்மை யுள்ளது. 4. கடவுள். "அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்" (பழமொழி). 5. கடவுளின் ஏற்பாடாகிய ஊழ்.

    தெய்வம் - வ. தைவ.

    தெய்வம் - தெய்வதம். "ஆங்கத் தெய்வதம் வாரா தோவென"

    (மணிமே. 9 : 70).

    தகரம் எழுத்துப் பேறு. ஒ.நோ: படவு-படவர்-பரவர்-பரதவர்.

    தெய்வதம் - வ. தைவத(daivata).

    தெய்வம் - L. deus, Gk. theos.

    தமிழரை என்றும் தம்மடிப்படுத்தவும் உலகத்தை ஏமாற்றவும் திட்டமிட்டுள்ள சமற்கிருத வெறியரான பிராமணர், மொழியிய லுண்மையை நெஞ்சார மறுத்து, தைவ என்னுந் தென்மொழித் திரிசொல்லினின்று தாம் செயற்கையாகத் திரித்துக்கொண்ட திவ் என்னும் மூலத்தினின்று, தெய்வம் தேவு தேவன் முதலிய தென் சொற்கள் பிறந்துள்ளதாகக் கூறுவர். தேய் என்னும் மூலத்திலுள்ள யகரமெய், தெய்வம் என்னுஞ் சொல்லிலுமிருப்பதையும், இலத்தீன கிரேக்கச் சொற்களிலும் யகரம் ஒலிப்பதையும், நோக்குக.

    தொட்டாற் சுடுவதும் தொடர்ந்து பட்டால் எரித்துக் கொல் வதும் பற்றி, தீக் கொடியதென்று கருதப்பட்டு, அதன் பெயரினின்றே