New Page 1
பட்டினத்தில் திங்கட்கும்
கோவிலிருந்தது. இளங்கோவடிகளும், "திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்" என்று மங்கல
வாழ்த்துப் பாடினார்.
"நிலாக்கோட்டம்" |
(சிலப். 9 : 13) |
திங்களைப்போல் தீயும் இரவில்
ஒளி தருவதால், கதிரவன் திங்கள் தீ ஆகிய மூன்றும் முச்சுடர் எனப்பட்டன.
"அந்திச் சேயொளி முச்சுடர்
முக்கணும்"
|
(தக்க யாகப். 281) |
பண்டைத் தமிழக முப்புலங்களுள், தென்புல
மென்னும் பாண்டிநாடு வெப்பமிக் கிருந்ததனால், பாண்டியன் திங்களைத் தன் குல முதலாகவும்; குணபுல
மென்னும் சோழநாடு பனிமலை வரை தொடர்ந்து வெப்பங் குன்றியிருந்ததனால், சோழன் கீழ்த் திசையிலெழுங்
கதிரவனைத் தன் குல முதலாகவும்; குடபுல மென்னும் சேர நாடு நாள்தோறும் பெருமழை பொழியும் குட
மலைத் தொடரைக் கொண்டிருந்ததனால், சேரன் தீயைத் தன் குலமுதலாகவும்; கொண்டிருந்தனர். மூவேந்தர்
குடிக் கிளைகளே, வடநாவலம் ஆரிய நாடாக மாறியபின், 'சந்திர வமிசம்', 'சூரிய வமிசம்', 'அக்கினி
வமிசம்' எனப் பெயர் பெற்றன.
நல்விலங்கு
வடார்க்காட்டு மாவட்ட ஆம்பூரின்
பழம்பெயர் 'ஆன்மை யூர்' என்றும், ஆவை வணங்கி வந்ததால் அப் பெயர் பெற்ற தென்றும், அங்கிருந்த
பெரும்புலவரும் பாவேந்தருமான துரை சாமிப் பாவலர் சொன்னார். இங்ஙனம் வேறு சில வூரிலும் ஆவை
வணங்கியிருக்கலாம்.
நச்சுயிரி
தமிழகத்தில் மக்களைத் தொன்றுதொட்டுக்
கொன்று வந்த நச்சுயிரிகளுள், தலைமையானது பாம்பு. பாம்பினத்தில், தீயதும் தீயதல்லாததும் ஆக
இருசாருள. தீயவற்றுள்ளும், நச்சுப் பல்லாற் கொத்தி மேனி நோயுண்டாக்குவனவும் விரைந்து உயிர்
போக்குவன வுமான சிற்றுடம்பினவும், வாயினாற் பற்றி மக்களையும் விலங்கு களையும் இரையாக
விழுங்கும் பேருடம்பினவும், ஆக இரண்டு வகுப்புகளுள. கொல்வது மட்டும் செய்வனவற்றுள், நல்ல
பாம்பு, விரியன் முதலிய பலவகை யுள. அவற்றுள்ளும், ஒவ்வொன்றும் பல திறப்பட்டதாகும்.
பாம்பு என்பது, முதற்கண்
நல்ல பாம்பின் பெயராகவேயி ருந்து, பின்னர்ப் பொதுப் பெயராயிற்று. பாதல் - பரவுதல். பா -
|