பக்கம் எண் :

தமிழர் மதம் 21

New Page 1

    சுரன் - சூரன் = 1. நெருப்பு (பிங்.). 2. கதிரவன் (பிங்.) "காதற் சூரனை யனைய சூரா" (பாரத. பதினேழாம். 49). சூரன் - வ. ஸூர்ய.

    ளகரம் லகரத்தின் திரிபு வளர்ச்சியாதலால், சுள் என்பதன் மூலம் சுல் என்பதே.

   
L. sol, E.sun, OE. sunne, sunna, ON. sunna, OS., OHG, sunno, sunna, Goth. sunno.

    ஒரே மூலத்தினின்று திரிந்த வடசொற்கள், ஸு ர என்றும் ஜ்வர என்றும் முதலெழுத்து  வேறுபட்டிருத்தலை, ஊன்றி நோக்கி உண்மை தெளிக.

    எல் = 1. ஒளி. "எல்லே யிலக்கம்" (தொல். சொல். 271). 2. வெயில் (பிங்.). 3. கதிரவன். "எற்படக் கண்போன் மலர்ந்த" (திருமுருகு. 74). எற்பாடு = கதிரவன் சாயுங் காலம். 4. பகல். "எல்லடிப் படுத்த கல்லாக் காட்சி" (புறம். 170).  5. நாள் (பிங்.).

    எல்லவன்  = கதிரவன். "எல்லவன் வீழு முன்னம்" (பாரத. பதினெட். 119).

    எல்லினான் = கதிரவன். "புயங்க முண்டுமிழ்ந்த வெல்லினா னென்" (கந்த பு. அக்கினி. 223 ).

    எல்லோன் = கதிரவன் (பிங்.).

    எல்லி = 1. கதிரவன் (பிங்.). 2. பகல். "இரவோ டெல்லியு மேத்துவார்" (தேவா. 344 : 8 ). ஒ.நோ: Gk. helios.

    புது + எல் = புத்தெல் - புத்தேள் = புதிதாக ஒளிவடிவில் தோன்றும் தெய்வம் அல்லது தேவன். "புத்தே ளுலகத்தும்" (குறள். 213).

    இதனால், எல் என்பது கதிரவனுக்கும் தேவனுக்கும் பொதுப் பெயரானமை காண்க.

    திங்கள்: ஞாயிறு மறைந்த இராக்காலத்தில், நிறைந்தும் குறைந்தும் மறைந்தும் அதற்குச் சிற்றளவு தலைமாறாகத் தோன்று வது  திங்கள். தழு - தகு - திகு - திகழ் - திங்கள். தழு - தழல் - தணல். தழதழ - தகதக. தக - தகம் - தங்கம். ஆயிரக்கணக்கான வெள்ளிகளை விட விளக்கமாய்த் திகழ்வதால், திங்கள் எனப்பட்டது.

    சிற்றொளி வீசுதல் தவிர வேறொரு நன்மையுஞ் செய்யா விடினும், வேனிற்கால வெப்பந் தாங்கமுடியாது வருந்திய மாந்தர், தண்ணொளி வீசும் திங்களையும் புகழ்ந்து போற்றினர். 'பிறை தொழு கென்றல்' என்னும் அகப்பொருட்டுறை, திங்கள் வணக்கம் தொன்றுதொட்டு நிகழ்ந்து வந்தமையைக் காட்டும். காவிரிப்பூம்