"செய்குவங் கொல்லோ நல்வினை யெனவே |
|
ஐயம் அறாஅர் கசடீண்டு காட்சி |
|
நீங்கா நெஞ்சத்துத் துணிவில்
லோரே |
|
யானை வேட்டுவன் யானையும் பெறுமே |
|
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும்
வருமே |
|
அதனால், உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி
னோர்க்குச் |
|
செய்வினை மருங்கின் எய்த லுண்டெனின் |
|
தொய்யா வுலகத்து நுகர்ச்சியும்
கூடும் |
|
தொய்யா வுலகத்து நுகர்ச்சி
யில்லெனின் |
|
மாறிப் பிறப்பின் இன்மையுங்
கூடும் |
|
மாறிப் பிறவா ராயினும் இமயத்துக் |
|
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத் |
|
தீதில் யாக்கையொடு மாய்தல்தவத் தலையே." |
(புறம். 214) |