பக்கம் எண் :

66தமிழர் மதம்

வளர

வளர்கின்ற காலத்து, இந்திரன் தான் இருடிகளுக்குக் கொடுத்த நிலையை மறந்து ஆண்டு வந்து வச்சிரத்தான் எறிய, அவ்வாறு வடிவும் ஒன்றாய் அவனுடனே பொருது, அவனைக் கெடுத்துப் பின் சூரபன்மாவைக் கொல்லுதற்கு அவ் வடிவம் ஆறாகிய வேறுபட்ட கூற்றாலே மண்டிச் சென்றதென்று, புராணங் கூறிற்று" என்பது திருமுருகாற்றுப்படை நச்சினார்க்கினியருரை(58).

    இது,

     "உமையொடு புணர்ந்த காம வதுவையுள்  
      ..............................................................  
      பயந்தோ ரென்ப பதுமத்துப் பாயல் (5 : 28-49)

என்னும் பரிபாடற் பகுதியைத் தழுவியது.

வள்ளி பிறப்பு

    தொண்டைநாட்டில், வெள்ளிமலை யருகில் மேற்பாடி என் னுஞ் சிற்றூரை, நம்பியரசன் என்னும் வேடர் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்குப் பெண்மக வின்மையால், ஒரு பெண்மகப் பேறு வேண்டி மலைத்தெய்வத்தை வழிபட்டு வந்தான்.

    அக்காலத்தில், சிவமுனி என்பவன், அம் மலையருகில் ஐம்புலனையும் அடக்கிச் சிவன்மேல் மனத்தைச் செலுத்தித் தவஞ் செய்துகொண்டிருந்தான். ஒரு நாள் ஓர் அழகிய இளம் பெண்மான் அவனருகில் வந்து உலாவியது. அதைக் கண்டு, அவன் கரை யிறந்து காமுற்று மதிமயங்கிப் பேரிடர்ப்பட்டான். அவன் காமக் காட்சியினால் அம் மான் கருவுற்று, உரிய காலத்தில் ஒரு பெண்மகவை யீன்று, வள்ளிக்கிழங் ககழ்ந்த ஒரு குழியில் இட்டுச் சென்றது. அக் குழவியைக் கண்ட நம்பியரசன் எடுத்து, வள்ளிக் கிழங்குக் குழியிற் கிடந்ததுபற்றி வள்ளியென்று பெயரிட்டுத் தன் தேவியிடங் கொடுத்தான். அவள் வளர்த்தாள்.

    சிவமுனிவன் இளம்பிணையைக் கண்டு மையல் கொண்டு பட்ட பாட்டை,

     "போர்த்தொழில் கடந்த வைவேற்
          புங்கவ னருளால் வந்த
      சீர்த்திடு நவ்வி தன்னைச்
          சிவமுனி யென்னுந் தூயோன்
      பார்த்தலு மிளைமைச் செவ்வி
          படைத்திடும் பிறனிற் கண்ட
      தூர்த்தனின் மைய லெய்திக்
          காமத்தாற் சுழல லுற்றான்."