New Page 1
"ஏமத்தின் வடிவஞ் சான்ற |
|
இலங்கெழிற் பிணையின் மாட்டே |
|
காமத்தின் வேட்கை வைத்துக் |
|
கவலையா லவல மெய்தி |
|
மாமத்த மளைபுக் கென்ன |
|
மனக்கருத் துடைந்து வேறா |
|
யூமத்தம் பயன்றுய்த் தார்போ |
|
லுன்மத்த
னாகி யுற்றான்." |
(கந்தபு.
வள்ளி. 21-2) |
என்று, கச்சியப்ப சிவாசாரியார்
என்னும் புலவர் சிறிதும் நாண மின்றிப் பாடியிருக்கின்றார். இடக்கர் மிகுந்தனவும் இயற்கைக்கு
மாறானவுமான இக்கதைகள், அகக்கரண வளர்ச்சியும் ஒழுக்க வுயர்வு மில்லாத ஒருவன் கட்டியன வாகும்.
முதலிலிருந்து முடிவுவரை, கந்த புராணம்
முற்றும் கட்டுக் கதையாகும். முருகனும் வள்ளியும், குமரிநாட்டிலேயே குறிஞ்சி மக்கள் உள்ளத்தில்
தோன்றிவிட்டனர். "இந்தப் புளுகு கந்த புராணத்திலு மில்லையே!", "கந்த புராணத்தி லில்லாத
புளுகு எந்தப் புராணத்திலுமில்லை." என்னும் பொதுமக்கள் கூற்றும் பழமொழியும் இங்குக் கவனிக்கத்தக்கன.
முருகன் 'சரவணம்' என்னும் நாணற்காட்டுப்
பொய்கையிற் பிறக்கவில்லை. அவனுக்கு ஒரே முகமும் இரு கையும்தான். அவன் சூரபதுமன் என்பவனைக்
கொல்லவுமில்லை; தேவயானை(தெய்வ யானை) என்பவளை மணக்கவு மில்லை.
காங்கேயன், சரவணன்(சரவணபவன்),
ஆறுமுகன்(சண் முகன்), பன்னிரு கையன், கார்த்திகேயன், முதலிய கந்தபுராணத்துப் பெயர்களெல்லாம்
முருகனுக்கு ஒருசிறிதும் ஏற்கா. நாற்றிசையுடன் மேலுங் கீழுஞ் சேர்ந்த அறுதிசைகளை, அல்லது
கோவில் கொண் டுள்ள ஆறு சிறந்த இடங்களை, முகமாகக் கொள்ளின், ஆறுமுகம் என்னும் பெயர்மட்டும்
முருகனுக்குப் பொருந்தும்.
கந்தபுராணம் போன்றே, ஏனைப்
புராணங்களும் தமிழருக்கு வேண்டுவனவும் ஏற்பனவும் அல்ல எனக் கூறி விடுக்க.
பிராமணருக்கு நல்லவன் என்று
பொருள்படும் சுப்பிர மணியன் என்னும் வடசொற் பெயர், முன்பு திருமாலுக்கும் சிவனுக் கும் பெயராக
வழங்கி, இன்று முருகனுக்குச் சிறப்பாக வழங்கி வருகின்றது.
திருமால் தோற்றரவுக் கதைகள்
திருமாலின் 'தசாவதாரம்'
என்னும் பத்துத் தோற்றரவுக் கதை களும் ஒரே காலத்தில் தோன்றியவை யல்ல. முதலில் எட்டும்,
|