க
கரையிலுள்ள, பாம்பணிக்
கோயிலிற் கொக்கிறகு செடியுள்ளது. இதையறியாது, கொக்கு வடிவில் வந்த குண்டாசுரன் என்னும்
அசுரனை, சிவபெருமான் கொன்று அவன் இறகை அணிந்தனன் என்று கதை கட்டினர்.
மரைக்காடு என்பது தஞ்சை மாவட்டத்தைச்
சேர்ந்த ஓர் அடவிப் பகுதி. மரை என்பது ஒரு மானினம். அது மிக்கிருந்த தனால் அவ்விடம் அப்
பெயர் பெற்றது. ஆரியர் அப் பெயரை மறைக்காடு எனத் திரித்து, ஒரு காலத்தில் ஆரிய மறைகள்
சிவனை வழிபட்டு வீடுபெற்ற இடமென்று, இயற்கைக்கு மாறானதும் ஒருபோதும் நிகழாததுமான பொருட்கரணியங்
காட்டிவிட்டனர்.
(12) பகுத்தறிவைக் கொல்லும் பச்சைப் பொய்க்கதைகள்
விருகன் அல்லது பன்மன்(பஸ்ம) என்னும்
அசுரன் சிவ பெருமானை நோக்கித் தவஞ் செய்ய, அவர் தோன்றி, என்ன ஈவு வேண்டுமென்று வினவினார்.
அவன், தான் எவர் தலைமேற் கைவைக்கினும் அவர் இறக்கவென ஈவு வேண்டிப் பெற்று,
அதன் உண்மையறிய அப் பெருமான் தலைமீதே கைவைக்கச் சென்றான். அவர் உடனே மறைந்தருளினார்.
அன்று பெண்ணுருக்கொண்டு அங்கு வந்த திருமாலை அவ் வசுரன் விரும்பிப் பின்செல்ல, அவர் அவனைக்
குளித்துவர ஏவினார். அவன் அவ்வாறே குளிக்குங்கால், தான் பெற்ற ஈவை மறந்து தன் தலைமேல் தானே
கை வைத்து இறந்தான்.
காசியப முனிவன் தட்சப் பிரசாபதியின்
புதல்வியர் பதின் மூவரை மணந்தனன். அம் மனைவியருள், அதிதியிடம் ஆதித்தரும், திதியிடம் தைத்தியரும்,
தனுவிடம் தானவரும், அனாயுவிடம் சித்தரும், பிரதையிடம் காந்தருவரும், முனியிடம் தேவமகளிரும்,
சுரசையிடம் இயக்கரும் அரக்கரும், இளையிடம் மரஞ்செடி கொடி புற் பூண்டுகளும், குரோதவசையிடம்
அரிமா புலி முதலிய விலங்குகளும், தாமரையிடம் குதிரை கழுதை பறவை முதலியனவும், சுரபியிடம் ஆநிரைகளும்,
வினதையிடம் அருண னும் கலுழனும், கத்துருவிடம் நாகரும் பிறந்தனர்.
இவை போலிகைக் கதைகள். அகத்தியன்
கும்பத்திற் பிறந் தான் என்பது போன்ற இடக்கர்க் கதைகள் இங்கு விடப்பட்டுள்ளன.
(13) கொண்முடிபு(சித்தாந்தம்)
துறவினாலேயே வீடுபே றென்றும்,
துறவு பிராமணனுக்கே யுரிய தென்றும், பிராமணன் வாழ்க்கை மாணவம்(பிரமசரியம்), மனை
வாழ்வு(கிருகத்தம்), காடுறைவு(வானப்பிரத்தம்), துறவு
|