பக்கம் எண் :

72தமிழர் மதம்

New Page 1
    பொன்மலை மேரு(பர்வதம்)
    பொன்னம்பலம் கனகசபை
    மயிலாடுதுறை மாயூரம்(மாயவரம்)
    மறைக்காடு(மரைக்காடு) வேதாரணியம்
    வினைதீர்த்தான் கோவில் வைத்தீசுவரன் கோவில்
         (புள்ளிருக்கு வேளுர்)  
    வெண்காடு சுவேதவனம்
    வெள்ளிமலை கைலாசம் - கைலாயம்

    களித்தல் (த.) = மகிழ்தல். களித்தல் (ம.) = விளையாடுதல். களி - கேல் (பிரா.) = விளையாடு. கேல் - கைல (வ.) = விளையாட்டு, மகிழ்ச்சி, இன்பம்.

    இரு என்னும் தமிழ் வினைச்சொல், தியூத்தானத்தின் (Teutonic) வடவழக்கில் இஸ்(is) என்றும், தென்வழக்கில் ஆர்(are) என்றும், திரிந்துள்ளது. இஸ் என்னும் வடிவம், இலத்தீனிலும் கிரேக்கத்திலும் எஸ்(es) என்றும், வேத ஆரியத்தில் அஸ்(as) என்றும் திரியும்.

    அஸ் - ஆஸ = இருக்கை. கைல + ஆஸ = கைலாஸ.

(11) சொற்பொருள் திரிப்புக் கதைகள்

    சிவமதம் குறிஞ்சிநிலத்திற்குரிய சேயோன் வணக்கத்தினின்று தோன்றியமையாலும், வீட்டுலகம் மேலேயுள்ளது என்னுங் கருத்தி னாலும், நாவலந் தேயத்தில் அல்லது உலகத்தில் முதற்றிற உயரமுள்ள வெள்ளிமலை மண்ணுலகப் பேரின்ப நிலையமாகக் கொள்ளப்பட்டது. மலையை இருக்கையாகக் கொண்ட சிவை மலைமகள் எனப்பட்டாள். மகள் = பெண்தெய்வம். ஒ.நோ: நிலமகள், நாமகள், மலர்மகள். இதை நோக்காது, மலைமகள் என்னும் பெயருக்கு மலையரசன் மகள் என்று பொருள் கொண்டு, அதற்கேற்ப ஒரு கதையைக் கட்டினர்.

    அக்கம் = முள், முண்மணி. அக்கம் என்னும் தென் சொல்லை அக்ஷ என்று திரித்து, அதற்குக் கண் என்னும் பொரு ளூட்டி, சிவபெருமான் கண்களினின்று விழுந்த நீரில் தோன்றிற் றென்று கதைகட்டி, சிவ பெருமானோடிணைக்கப்பட்ட உருத்திரன் என்னும் ஆரியத் தெய்வப் பெயரொடு சேர்த்து உருத்திராக்கம் (ருத்ராக்ஷ) என்றனர்.

    கொக்கிறகு என்பது ஒருவகைப் பூவின் பெயர். வடிவிலும் நிறத்திலும் அளவிலும் கொக்கிறகை ஒத்திருப்பதால், அப் பெயர் பெற் றது. அரச மன்னார்குடியருகிலோடும் பாம்பணி யாற்றின் வட