ஓங
ஓங்கார வரிவடிவம் தமிழ் ஓகாரவரி
வடிவே யாதலாலும், அது யானைவடிவை யொத்ததென்று விநாயக புராணங் கூறுவதா லும், ஓங்கார மந்திரம்
தமிழ் மந்திரமேயென்பது தெளிவாம்.
அது சிவனியத்திற் குரியதாயினும்,
மாலியத்திலும் ஆளப்படு வது, முன்னதன் முன்மையையும் தொன்மையையும் முதன்மையை யும் உணர்த்தும்.
திருவைந் தெழுத்து
'சிவ போற்றி'(= சிவனே! வணக்கம்)
என்பதே, தமிழர் கொண் டதும் உண்மையானதுமான திருவைந்தெழுத்தாம். மாணிக்க வாசகரின்
போற்றித் திருவகவலிலுள்ள போற்றித் தொடர்களை நோக்குக.
"தென்னா டுடைய சிவனே
போற்றி" |
(போற்றி.
164) |
ஆரியர், 'சிவ போற்றி' என்னும்
உண்மைத் திருவைந்தெழுத் தைச் சமற்கிருதத்திற் 'சிவாயநம:' என்று மொழிபெயர்த்துள்ளனர்.
சிவாய என்பது வடமொழி யுருபேற்ற தென்சொல்.
'ய' என்பது வடமொழியில் 4ஆம் வேற்றுமை
ஒருமை யுருபு. அதை யேற்கும் பெயரின் அகரவீறு ஆகார வீறாக நீளும். அதனாற் சிவ என்னும் பெயர்
4ஆம் வேற்றுமையிற் சிவாய என்னும் வடிவு கொள்ளும். அதனொடு புணரும் நமஸ்(வணக்கம்) என்னும்
வடசொல் நம: என்று திரியும். ஆகவே, சிவாயநம: என்னும் இரு மொழித் தொடர்ச் சொல், உண்மையில்
ஆறெழுத்தேயன்றி ஐந்தெழுத்தாகாது. அது ஈறு கெட்டுத் தமிழிற் சிவாயநம என்று நிற்கும்போதே ஐந்தெழுத்தாகும்.
சிவாயநம என்பது நமசிவாய என்று
தமிழில் முறைமாறி நிற்கும் போதும், நமச்சிவாய என்று இடையில் வலிமிக்கு ஆறெழுத் தாகும்.
"நமச்சிவாய வாழ்க நாதன்றாள் வாழ்க" |
என்று மாணிக்கவாசகரின் 'சிவபுராணம்'
தொடங்குதல் காண்க.
"நன்றுகண் டாயது நமச்சிவா
யக்கனி." |
(திருமந்.
2649) |
சிவாய நம என்னும் இருமொழித் தொடரைச் சிவயநம என்று இடையாகாரங் குறுக்கி, அது சிறப்பு, வனப்பு,
யாப்பு, நடப்பு, மறைப்பு என்னும் தென்சொற்களின் முதலெழுத்துத் தொகுப்பென்றும்; அவ்வெழுத்துகள்
முறையே சிவன், ஆற்றல்(சத்தி, சிவை), ஆதன் (சீவன்), மறைப்பு(திரோதாயி) அல்லது
மாசு(மலம்), மாயை என்பவற்றைக் குறிக்குமென்றும், கூறுவது உண்மைக்கும் உத்திக்கும்
|