New Page 1
"சேவார் வெல்கொடிச் சிவனே
போற்றி" |
|
"சிராப்பள்ளி மேவிய சிவனே
போற்றி" |
|
"தென்னா டுடைய சிவனே போற்றி" |
|
"சிறவே போற்றி சிவமே
போற்றி" |
|
"சிந்தனைக் கரிய சிவமே
போற்றி" |
என்று மாணிக்கவாசகரே தம்
'போற்றித் திருவகவ'லில் வழுத்தி யிருத்தல் காண்க.
'சிவனே' என்பது சேய்மை விளி
வடிவும், 'சிவ' என்பது அண்மை விளிவடிவும், ஆன ஒரே சொல்லே. சிவனை முன் னிலைப் படுத்தியோ
உண்ணிலைப்படுத்தியோ விளிக்கும்போது, 'சிவ' என்னும் வடிவே ஏற்றதாம். ஆதலால், 'சிவனே
போற்றி' என்பதும் 'சிவ போற்றி' என்பதும் ஒன்றேயாம். இவையே, ஆரியர் தென்னாடு வருமுன்பும்
இந்தியாவிற்குட் புகுமுன்பும், தொன்று தொட்டு வழங்கிய குமரிநாட்டுத் தமிழர் வழக்காம். வேதமொழியும்
சமற்கிருதமும் ஆகிய கீழையாரியம் தேவமொழி யென்னும் ஆரிய ஏமாற்றும், தமிழரின் குருட்டு மூட
நம்பிக்கையுமே, சிவ போற்றி என்னும் ஒரு மொழி மூல உண்மைத் திருவைந்தெழுத்தை மறைத்ததென்று,
உண்மையறிந்து செந்நெறி கடைப்பிடிக்க.
'சிவாய நம' என்னும் சமற்கிருதத்
தொடரும்,'obeisance to Siva' என்னும் ஆங்கிலத் தொடரும், பொருளளவிலும் பயனள விலும் ஒன்றே.
சிவன் என்னும் தென்சொல்லைக்
கடன்கொண்டு, அதை ஒப்புக்கொள்ளாது வடசொல்லென்று ஏமாற்றும் ஆரியப் புரட்டு, இறைவனுக்கு ஏற்குமா?
அப் புரட்டுச் சொல் மந்திரமாகுமா? எண்ணிக் காண்க.
(15) மெய்ப்பொருளியல்
எங்கும் நிறைந்துள்ள இறைவனே, சிவனியராற்
சிவன் என்னும் பெயரால் வணங்கப்படுகின்றான். சிவன் பெயர்களுள் இறைவன் என்பதும் ஒன்று.
இறைவன் எங்குந் தங்கியிருப்பவன். இறுத்தல் - தங்குதல்.
"இருசுட ரோடிய மானனைம் பூதமென் |
|
றெட்டு வகையு முயிரும்யாக் கையுமாய்க் |
|
கட்டிநிற் போனும்.........................." |
(மணிமே.
27 : 89-91) |
என்று கி.பி. 2ஆம் நூற்றாண்டிலேயே
சிவன் வடிவங் கூறப்பட்டது. இறைவன் என்னும் பெயராலும் எண்குணத்தான் என்னும் இயல்
|