ச
சிவம், ஆற்றல், ஓதை (நாதம்),
விந்து என்னும் நான்கும் ஒடுக்க (லய) நிலையிலுள்ள சிவனின் உருவிலா(அரூப)த் திருமேனி களும்;
என்றும் நல்லான் என்பது நுகர்வு(போக) நிலையிலுள்ள சிவனின் உருவவுருவிலா(ரூபாரூப)த் திருமேனியும்;
பெருவுடையான், உருத்திரன், மால், நான்முகன் என்னும் நான்கும் அதிகார நிலையி லுள்ள சிவனின்
உருவ(ரூப)த் திருமேனிகளும் ஆகுமென்றும்;
திருவிலங்கம்(லிங்கோற்பவன்),
நலவிருக்கையன்(சுகாசனன்), ஆற்றல் தோற்றி(சக்திதரமூர்த்தி), மணவழகன்(கலியாணசுந்தர மூர்த்தி),
மங்கைபங்கன்(அர்த்தநாரீசுவரன்), சிவை கந்தர் சேர்ந்தான் (சோமாஸ்கந்தன்), சக்கர மீந்தான்(சக்ரவரதன்),
முத்திருமேனி (திரி மூர்த்தி), மாலிடங் கொண்டான்(ஹரியர்த்தன், சங்கர நாராயணன்),
தென்முக நம்பி(தக்ஷிணாமூர்த்தி), மண்டையேந்தி(பிக்ஷடான மூர்த்தி, காபாலீ), குறளன் முதுகொடித்தான்(கங்காளன்),
காமனைக் காய்ந்தான்(காமாரி), காலனை யுதைத்தான்(கால சங்காரமூர்த்தி), கடல் வளர்ந்தானைக்
கொன்றான்(சலந்தராரி), முப்புர மெரித்தோன் (திரிபுராரி), எண்காற் புள்ளுருவன்(சரபமூர்த்தி),
நஞ்சுண்டான் அல்லது கறைமிடற்றன்(நீலகண்டன்), முப்பாதன்(திரிபாதன்), ஒரு பாதன்(ஏகபாதன்),
பேமுருவன்(பைரவன்), விடையேறி (இடபா ரூடன்), பிறைசூடி(சந்திரசேகரன்), நடவரசன்(நடராஜன்),
கங்கை தாங்கி(கங்காதரன்) என்னும் இருபத்தைந்தும் சிவ வழிபாட்டு வடிவங்கள் என்றும்;
ஆற்றலை(சக்தி) விருப்பாற்றல்(இச்சா
சக்தி), அறிவாற்றல் (ஞான சக்தி), வினையாற்றல்(கிரியா சக்தி) என மூன்றாக வகுத்தும்,
மேலும் தொண்டாக (ஒன்பதாக) விரித்தும், ஐம்பதாகப் பெருக்கியும்;
மாயை(மாயா, மோஹினீ), காலம்,
ஊழ்(நியதி), கலை, அறிவம்(வித்தை), விழைவு(அராகம்), ஆதன்(புருஷ) என்னும் ஏழும் அறிவ மெய்ப்பொருள்(வித்யாதத்வம்)என்றும்,
அவற்றை இறைவன் ஈறிலி(அனந்தன்) என்னும் வாலறிவன் வாயிலாகக் கருமிய (காரிய)ப் படுத்துவானென்றும்;
இங்ஙனம் சிவ மெய்ப்பொருள் ஐந்தும்,
அறிவ மெய்ப் பொருள் ஏழும், எல்லா மதங்கட்கும் பொதுவான ஆத மெய்ப் பொருள் இருபத்து நான்கொடு
கூடி, மெய்ப்பொருள் மொத்தம் முப்பத்தா றென்றும், இது சிவனியக் கொண்முடிபு சிறப்பென்றும்;
தமிழரை மயக்கி, உயர்ந்த அறிவியற் கல்வியும் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவரும் குருட்டுத்
தனமாக நம்பி உருப்போட்டுக் கிளிப் பிள்ளைப் பாடமாக ஒப்பிக்குமாறு செய்து விட்டனர் ஆரியர்.
இலங்கம்(லிங்கம்), மங்கைபங்கன், விடையேறி, நடவரசன், அந் தணன் அல்லது குரவன் என்னும் ஐந்தே
தமிழர் வழிபாட்டு வடிவம் என்பது, முன்னரே கூறப்பட்டது.
|