New Page 1
(சவிகற்ப ஞானம்) உண்டாகும் என்றும்,
அவையின்றேற் பொதுப் படுத்துணர்வே(நிர்விகற்ப ஞானமே) உண்டாகும் என்றும்; ஆரியர் தம்
கருத்துகளைச் சிவனிய மெய்ப்பொருளியலிற் புகுத்தி விட்டனர்.
ஆரிய மந்திரம் எழுகோடி யென்னுங்
கூற்று முள்ளது. சொல்லுலகம் என்று கண்கூடும் நிலையும் ஆன ஒரு தனியுலகம் இல்லவே யில்லை. வெளியிடத்திற்
பொருள்கள் மோதுவதனாற் செவிப்புலனான ஒலியும் ஓசையும் தோன்றி, உடனே நீர்மே லெழுத்துப்
போல் மறையும். அவற்றைக் குறிக்கும் வரிவடிவுகளே, அவை எழுதப்பட்ட பொருள்கள் உள்ளவரை கட்புலனாக
நிற்கும்.
நாடாப் பதிவானிற் பதியப்பட்ட
பேச்சும் பாட்டுமான ஒலிகளும், அவை தோன்றியவுடனேயே மறையும்.
எல்லா வொலிகளும், கருத்தறிவிக்கும்
குறிகளான சொல்லும். சொல்லுறுப்புமாகப் பயன்படா. மாந்தன் வாயிற் பலுக்க(உச்சரிக்க)க் கூடிய
ஒலிகளே சொற்களாம். ஒரு வகுப்பார் அல்லது இனத் தார் வழங்கும் சொற்றொகுதியே மொழியாம்.
மொழியில்லாமற் பறவையும் விலங்கும்போல்
ஒருசில வொலிகளைக் கொண்டே, முந்தியல் மாந்தர் நீண்ட காலமாக வாழ்ந்து வந்தனர்.
முதற் காலத்திற் சொற்களாகவே
மொழியொலிகள் தோன்றின. நாகரிக மாந்தன் மொழியறிவு பெற்ற பின்பே, சொற்களை எழுத் தொலிகளாகப்
பகுத்தான். ஓரெழுத் தொலியாகவும் பல வெழுத் தொலியாகவும் சொற்கள் இரு வகையாய் அமையும்.
பல எழுத்தொலிகள் மக்களெல்லார்க்கும்
பொதுவாயினும், மாந்தனின வளர்ச்சிக் காலம், தட்பவெப்ப நிலை முதலியவற்றின் வேறுபாட்டால்,
பல இனத்தார் மொழிகளில் சிலவும் பலவுமான சிறப் பெழுத்தொலிகளும் அமைந்துள்ளன.
தமிழர் குமரிநாட்டில் தோன்றிய
முந்திய இனத்தாராதலின், அவர் மொழியில் முப்பதொலிகளே
அமைந்துள்ளன. அவை பெரும் பாலும் மிக எளியன. ஆரியர், அவருள்ளும் வேத ஆரியர், மிக
மிகப் பிந்தியவராதலின், அவர் மொழியில் 51 ஒலிகள் அமைந்துள் ளன. அவற்றுட் பல ஒலித்தற்கு
அரியன; சில செயற்கையானவை.
சிவனிய மெய்ப்பொருளியல் எழுத்து
51 என்று கூறியிருப்பது சமற்கிருதம் நோக்கியேயாம். அது தமிழர் மொழியன்று. கோலெ
ழுத்துக்காலத்திலும் வட்டெழுத்துக் காலத்திலும் தமிழிலும்
51 எழுத்தி ருந்தன என்று கூறுவது, வரலாற்றறிவும் மொழிநூலறிவும் அறவும் இன்மையையே காட்டும்.
கோவில்களில் 51 விளக்கேற்றி எழுத்தா லத்தி(அக்கராலத்தி) எடுப்பதும், ஆரிய மொழியமைப்புப்
பற்றியே.
|