பக்கம் எண் :

88தமிழர் மதம்

    எழுத்தொலி அல்லது மொழியொலி மூச்சுக் காற்றாகிய உயிர்ப்பு வளியாற் பிறக்குமேயன்றி, ஆரியர் கூறியதுபோல் உதானன் என்னும் உந்தி வளியாற் பிறவாது.

    காட்சியும் கருத்தும் ஆகிய இருவகைப் பொருள்களும் தோன்றிய பின்னரே, அவற்றைக் குறிக்கும் சொற்கள் மாந்தனால் அமைக்கப்பட்டன. பொருள் தோன்றியபோதே சொல்லும் உடன் தோன்றிற் றென்றும், சொல் இயற்கையாகப் பொருளுணர்த்து மென்றும், இடுகுறியாகவும் சொற்கள் இருக்குமென்றும், வட மொழி தேவமொழியென்றும், அது வேறெம் மொழியினின்றும். கடன் கொள்ளாதென்றும், உண்மைக்கும் மொழிநூற்கும் மாறான பல அறியாமையும் ஏமாற்றும் ஒருங்கே கலந்த கூற்றுகள் தமிழுக்கும் தமிழனுக்கும் ஓரளவு கூற்றாகவே முடிந்தன.

     "அகார முதலாக ஐம்பத்தொன் றாகி" (திருமந். 2950)
   
     "ஓதும் எழுத்தோ டுயிர்க்கலை மூவைந்தும்  
      ஆதி யெழுத்தவை ஐம்பத்தோ டொன்றென்பர்" (திருமந். 942)
   
     "அந்தமும் இன்றியே ஐம்பத்தொன் றாயதே" (திருமந். 943)
   
     "ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும்  
      ஐம்ப தெழுத்தே அனைத்தாக மங்களும்  
      ஐம்ப தெழுத்தேயும் ஆவ தறிந்தபின்  
      ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத் தாமே" (திருமந். 944)

என்று திருமூலர் திருமந்திரத்தினின்று மேற்கோள் காட்டிப் பயனில்லை. இதற்கு விடை திருவைந்தெழுத்து விளக்கத்திலேயே கூறப்பட்டு விட்டது. "ஐம்பத்தோ டொன்றென்பர்" என்று பிறர் கூற்றாகக் கூறியதும் இங்குக் கூர்ந்து நோக்கத்தக்கது. உலகனைத்துந் தழுவிய வரலாறும் மொழிநூலும் போன்ற அறிவியற் செய்திகளை, ஒருசார் தமிழர்க்கு மட்டும் ஏற்குமாறு திரித்துக் கூறுவதால், கருதிய பயன் கைகூடிவிடாது. ஓர் உலகப் பொதுவுண்மையை உலக அறிஞர் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். பொய்யொடு கலந்த மெய்யும் பொய்யாகவேபோம்.

(16) இறையுயி ருறவுக் கொள்கை

    இறைவனுக்கும் ஆதனுக்கும் இடைப்பட்ட உறவியல்புபற்றி, ஒருமை(அத்துவிதம்) என்னும் ஒற்றுமை யுறழும்(அபேதவாதமும்), இருமை(துவைதம்) என்னும் வேற்றுமையுறழும்(பேதவாதமும்), சிறப்பொருமை(விசிஷ்டாத்துவிதம்) என்னும் ஒன்றிய வேற்றுமை யுறழும்(பேதாபேதவாதமும்) தோன்றியுள்ளன. இம் மூன்றற்கும் பொதுவான தூவொருமையே(சுத்தாதுவிதமே) சிவனியக் கொள்கை