உட
உடனே ஒரு பிராமணப் பெண், அரங்கநாயகி
தன் மீதேறிய தாக நடித்து அணங்காடி, "பிராமண வுண்டி சமைக்க அரண் மனைப் பட்டாடைகளை எண்ணெய்
தோய்த்தெரித்த போதெ ழுந்த புகையைப் பொறுக்க முடியாது, மடைப்பள்ளியா ரெல்லாம் ஓடிப்
போய்விட்டனர். அரங்கநாயகியே ஒரு பிராமண மடைமக ளாக வந்து சமைத்தாள். அவளும் புகையால் முகத்திலும்
மூக்கிலும் தாக்குண்டு, அங்கிருந்த கழுநீர்த் தொட்டியில் மூக்குச் சிந்தியபோது, அவள் மூக்குத்தி
அத் தொட்டிக்குள் விழுந்து இன்னும் அங்கேயே கிடக்கின்றது. அதற்காகக் கோவிற் பூசகனை அடிப்பது
அறங் கடை" என்று விளம்ப, நாயக்கரும் அங்ஙனமே மூக்குத்தியைக் கண்டெடுத்து, அரங்கநாயகியே தன்
அரண் மனைக்கு வந்தருளினா ளென்று அளவற்ற மகிழ்ச்சி கொண்டாடி, அம் மூக்குத்திபோல் எண் மூக்குத்தியும்
நாய்ச்சியார் பொற்படிமை யொன்றும் செய்வித்து, மேள தாளங்களுடன் திருவரங்கத்திற்கு அட்டோலக்கமாய்
அனுப்பிவைத்தார்.
ஆங்கூர்க் கோவிற் பூசகன், பூசை
வேளையில் திருவமுது படைக்காது வெறுங் கொட்டுமுழக்கம் மட்டும் செய்வித்து வந்தது,
"தேங்குபுக ழாங்கூர்ச் சிவனேயல்
யாளியப்பா |
நாங்கள் பசித்திருக்கை நாயமோ
- போங்காணும் |
கூறுசங்கு தோன்முரசு கொட்டோசை
யல்லாமற் |
சோறுகண்ட மூளியார் சொல்" |
என்னும் இரட்டையர் பாடல் தெரிவிக்கின்றது.
சங்கரநயினார் கோவிற் சிவமால்(சங்கரநாராயணன்)
செப்புப் படிமையை, செண்பகக்கண் நம்பி யென்னும் பூசகன் திருடிக் கொண்டு போய்த் திருவுத்தரகோச
மங்கையில் விற்றுவிட்டான். அவனுக்குத் தண்டனையே யில்லை.
(3) தமிழ்க் கேடு
சின்னமனூர்ச் சிவபிரான்
கோயில் பெருந் திருவிழாவில்(1902), திருவுருவம் மறுகிற்கு(வீதிக்கு) எழுந்தருளி ஆரியப்
பார்ப்பனச் சேரியில் வரும்போது, சிவதீக்கை பெற்ற வேளாள ஓதுவார் தேவார திருவாசகங்களைப்
பண்ணிசையோடு ஓதி வந்ததை, சூத்திரப் பாடல்கள் தங்கள் காதில் விழக்கூடாதென்று அங்குள்ள
பிராமணர் தடுத்ததொடு, ஊர்காவல் கண்காணிப்பாளராகவும் வழக்குத் தீர்ப்பாளராயுமிருந்த பிராமணரின்
பாதுகாப்பையும் தேடிக் கொண்டனர்.
தமிழ் வழிபாட்டு விலக்கு,
முதலிரு கழக இலக்கிய முற்றழிவு, நூற்றுக்கணக்கான இடைக்கால நூல் இறந்துபாடு, அறிவியல்
|