பக்கம் எண் :

98தமிழர் மதம்

மாறு, திரு இராமானுச அடிகளை அழைத்தான். அடிகட்குத் தலைமாறாகக் கூரத்தாழ்வான் என்னும் மாணவகரே (சீடரே) சென்று, "சிவத்திலும் பெரியது துரோணம்" என்று கூறியத னால், உடனே தம் இரு கண்ணையும் இழந்தார்.

    வடமொழியிற் சிவம் என்பது குறுணி(ஒரு மரக்கால்) என் றும்,  துரோணம் என்பது தூணி(இரு மரக்கால்) என்றும் திருமால் என்றும் , பொருள்படும். சிவத்தினும் பெரியவன் திருமால் என்னுங் கருத்தை, இங்ஙனம் நகையாண்டி செய்து கூறியதனால், சிவனையும் குலோத்துங்கனையும் ஒருங்கே பழித்த குற்றத்திற்குள்ளானார் கூரத்தாழ்வார். இராமானுச அடிகளோ, இவ் விளைவை அறியு முன்னரே, ஒய்சள நாட்டிற்கு விரைந்து சென்று தப்பினார்.

    'சிவவோதி நுவற்சி'(சிவஞான போதம்) ஆசிரியர் மெய்கண் டார், வரலாற்றவும் மொழிநூலாராய்ச்சியும் அக் காலத்தின்மை யால், முத்திருமேனிக் கொள்கையினின்று தப்ப வழி தெரியாது, "அந்தம் ஆதி என்மனார் புலவர்" என்றொரு வட்டவழி ஏரண முறையைக் கையாண்டு, சிவனுயர்வை நாட்டினார்.

    தொன்ம(புராண)க் கதைகளையே சான்றாகக் கொண்டு, சிவ மாலரின் ஏற்றத் தாழ்வைக் கூறும் அரியர(ஹரிஹர) தார தம்மியம் என்றொரு தமிழ்ப் பனுவலு முண்டு. இது அப் பெயர் கொண்ட வடநூலின் மொழிபெயர்ப்பு.

(4) சிவனியர் ஆரியச் சார்பும் திருமாலியர் தமிழ்ச் சார்பும்

    சிவனியம் மாலியம் இரண்டும் தமிழ மதங்களேனும், முந்தித் தோன்றியதனாலும், பெரும்பான்மைத் தமிழராற் கைக்கொள்ளப் பெறுவதனாலும், சிவனியமே மிகுந்த தமிழச் சார்பாயிருத்தல் வேண்டும். ஆயின், இயற்கைக்கு முரணாகத் திருமாலியமே மிகுந்த தமிழச் சார்பாகவுள்ளது.

சிவனியம்

         மாலியம்
   
     ஆரிய வேதமே வேதமெனத்
     தமிழராலும் ஒப்புக்கொள்ளப்
     பட்டுள்ளது.
நாலாயிரத் தெய்வப் பனுவலும்ஆரிய
வேதத்தோ டொப்பத் திராவிட வேதம்
என(த்தென்கலை)ப் பிராமணராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
   
     மெய்ப்பொருளியல் ஆரியக் கலப்பு
     மிக்கது.
மெய்ப்பொருளியல் ஆரியக்  கலப்
பில்லாதது.
   
     திருஞான சம்பந்தராகிய பிராமணரே
     தலைசிறந்த அடியார்.
நம்மாழ்வாராகிய தமிழரே தலைசிறந்த
ஆழ்வார்.