பக்கம் எண் :

தமிழர் மதம் 99

    தில்லை நடவரசன் திருப்படிமையைக் காண
    வந்த சிறந்த அடியாரான நந்தனார்
    தீண்டாதவர் என்று   தீயிலிட்டுக்
    கொளுத்தப்பட்டார்
திருவரங்க நம்பி திருப்படிமையைக் காண அஞ்சித் தொலைவில் நின்ற திருப்பாணாழ்வார், திருவரங்க நம்பியேவலால் தலைமைப் பூசகராகிய பிராமணர் தோள்மீது ஏற்றிக்கொண்டு வரப்பட்டுத் தெய்வத் திருமுன்பு நிறுத்தப்பெற்றார்.
    தெய்வப் பெயரும் சமயகுரவர் பெயரும்
    திருநகர்ப் பெயரும் பெரும்பாலும்
    வடசொற்களாக அமைந்தும், மாற்றவும்
    பட்டுள்ளன.
தெய்வப் பெயரும், ஆழ்வார் பெயரும்
திருநகர்ப் பெயரும் பெரும்பாலும்
தென்சொற்களாக அமைந்துள்ளன.
    கொண்முடிபு வீடுபேற்று வாயில்களை
    ஆரிய முறைப்படி கூறுவது
கொண்முடிபு வீடுபேற்று வாயில்களை
தமிழ் முறைப்படி கூறுவது.

    திருநீலகண்ட யாழ்ப்பாணர் மதுரையில் முதல்நாள் கோயில் வாயிலில் நின்று பாடினார். திருவாரூரிலும், அங்ஙனமே கோவில் வாயிலில் நின்று பாட, அதன்பின் அவர்க்கு வடதிசைக்கண் வேறு வாயில் தனியாக வகுக்கப்பட்டது. திருக்காழியிற் சம்பந்தர் அவரைக் கோயிற் புறமுன்றிற்குக் கொண்டு சென்று கும்பிடு வித்தார்.
 

     "நண்ணிய கீர்த்தி நலங்கொள் கேள்வி
      நான்மறை ஞானசம் பந்தன் சொன்ன
      பண்ணியல் பாடல்.................."
 
     "பொன்புடை சூழ்தரு மாடக் காழிப்
      பூசுரன் ஞானசம் பந்தன் சொன்ன
      இன்புடைப் பாடல்கள் பத்தும்......."
 
     "கண்டல்கள் மிண்டிய கானற் காழிக்
      கவுணியன் ஞானசம் பந்தன் சொன்ன
      கொண்டினிதா விசைபாடி........"

எனவும், பிறவாறும் சம்பந்தர் தம் தேவாரப் பதிகந்தொறும் இறுதி யில் தம்மைப்பற்றிக் குறித்துள்ள முறைமையையும், அப்பர் சுந்தரர் தேவாரப் பாடல்களையும், நோக்கின்,

     "சம்பந்தன் தன்னைப் பாடினான்
      சுந்தரன் பொன்னைப் பாடினான்
      என்னப்பன் என்னைப் பாடினான்"

என்று இறைவன் கூற்றாகக் கூறும் மக்கள் சொலவடை ஓரளவு பொருத்த முள்ளதாகவே தோன்றுகின்றது.