பக்கம் எண் :

11

    இதை,
"நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்
எம்மனை வதுவை நன்மணங் கழிகெனச்
சொல்லின் எவனோ மற்றே வென்வேல்
மையற விளங்கிய கழலடிப்
பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே"    
(399)

என்னும் ஐங்குறுநூற்றுச் செய்யுளால் அறியலாம்.

    இது, உடன்கொண்டுபோன காதலன் மீண்டு வந்து, தன் காதலி யைத் தன் இல்லத்திற்குக் கொண்டு சென்ற விடத்து, அவன் தாய் அவளுக்குச் சிலம்புகழி நோன்பு செய்கின்றாளெனக் கேட்ட நற்றாய் (பெற்ற தாய்), அங்கு நின்றும் வந்தார்க்குச் சொல்லியது.

    (நும் - உம். சிலம்பு - தண்டை. கழீஇ - கழித்து. அயரினும் - கொண்டாடி னாலும். கழிகென - நடக்கவென்று. எவனோ - என்ன. வென் - வெற்றி. மையற - குற்றம் நீங்க, கழல் - வீரக்காலணி, காளை - வீரனாகிய காதலன்).

    கரணமின்றியும் கணவனும் மனைவியுமாக இரு காதலர் இசைந்து வாழக் கூடுமாயினும், கரணத்தொடு தொடங்கும் இல்லறமே எல்லாராலும் போற்றப்படுவதாம்; அஃதில்லாக்கால், அது வைப்பு என இழிந் தோராலும் தூற்றப்படுவதே.

    காதலர் வாழ்வு களவொழுக்கத்தோடு தொடங்கின் மெய்யுறு புணர்ச்சியும், அல்லாக்கால் உள்ளப்புணர்ச்சிமாத்திரையும், கற்பிற்கு முன் பெறுபவராவர்.

    பெற்றோரும் பிறரும் முடித்து வைக்கும் திருமணத்திலும் மண மக்கள் இருவர்க்கும் காதலுண்டாகலா மெனினும், காதல் மணமென்று சிறப்பித்துச் சொல்லப்பெறுவது ஓர் ஆடவனும் ஒரு பெண்டும் தாமாக வாழ்க்கை ஒப்பந்தஞ் செய்துகொள்வதே.

மடலேற்றம்

    முதுபழங்காலத்தில், ஒரு கடுங்காதலன் அல்லது காதற்பித்தன் அவன் காதலியை மணத்தற்கு அவள் பெற்றோர் இசையாவிடின், அவளைப் பெறுதற்கு மடலேற்றம் என்னும் உயிர்ச்சேதத்திற் கிடமான ஒரு வன்முறையைக் கையாள்வதுண்டு. அது இக்காலத்துச் சத்தியாக்கிரக மென்னும் பாடுகிடப்புப் போன்றது.

    மடலேறத் துணிந்த காதலன், நீர்ச்சீலை ஒன்றேயுடுத்து உடம் பெலாஞ் சாம்பற்பூசி எருக்கமாலையணிந்து, தன் காதலியின் ஊர் நடுவே தவநிலையிலமர்ந்து, அவள் உருவை வரைந்த ஒரு துணி யைக் கையிலேந்தி, அதை உற்றுநோக்கிய வண்ணமாய் வாளாவி ருப்பன். அதனைக் கண்ட அவ் வூரார் "நீ ஆய்வு (சோதனை) தருகின்றாயா?" எனக் கேட்பர். அவன் "தருகின்றேன்" எனின், பனங்கருக்கு மட்டையாற் செய்த ஒரு பொய்க் குதிரையின்மேல்