பக்கம் எண் :

17

    இத்தகைய இன்பம் மிகமிக அரிதாய் ஒருசிலர்க்கே கிட்டுவதாயினும், அதை ஓர் அளவையாகக்கொண்டு கூறியது 'புலனெறி வழக்கம்' எனப்படும்.

2. மணத்தொகை

    பண்டைத் தமிழ் மணங்கட்கு இத்துணை என்னுந் தொகை வரம்பில்லை. மணப்பருவம் மணமகனுக்குப் பதினாறாண்டென்றும், மணமகளுக்குப் பன்னீராண்டென்றும், நூல்கள் கூறும். பண்டைக் காலத் தமிழ்மக்கள் எத்துணை வலிமை மிக்கவராய் இருந்திருப்பினும், நூல்களில் மணமக்கட்குக் குறிக்கப்பட்ட பருவம் முந்தியதே. அக் காலத்தில் திருமணச் சட்ட வரம்பின்மையாலும், இன்பச் சிறப்பொன் றையே மக்கள் கருதியதாலும், இளமை முதல் முதுமைவரை எத்துணை மணஞ்செய்ய முடியுமோ அத்துணை மணஞ் செய்தற்கு அன்று இடமி ருந்தது. ஆயினும் சில அரசரும் கீழோருமே இந் நிலையை மிகுதி யாய்ப் பயன்படுத்தினர். பெண்டிர்க்குக் காமநுகர்ச்சிப் பருவம் பன்னீ ராண்டு முதல் நாற்பதாண்டுவரை என்பது நூன்மரபு.

    பெண்ணின் ஐந்தாண்டு முதல் நாற்பதாண்டு வரைப்பட்ட பருவத் தைப் பின்வருமாறு எழுநிலையாக இலக்கண நூல்கள் வகுத்துக் கூறும்.

(1) பேதை  5- 7ஆண்டு (5) அரிவை 20-25 ஆண்டு
(2) பெதும்பை 8-11 ஆண்டு (6) தெரிவை 26-31 ஆண்டு.
(3) மங்கை 12-13 ஆண்டு (7) பேரிளம்பெண் 32-40 ஆண்டு
(4) மடந்தை 14-19 ஆண்டு    

    அரசர்க்குச் செல்வச்சிறப்பு, கீழோருக்குத் தீர்வை முறையும் மனைவியர் உழைப்பும், பல்மணஞ் செய்தற்குத் துணையாயிருந்தன.

    அக்காலத்தரசர் கண்கண்ட தெய்வங்களாதலின், அவர் பன் மணஞ் செய்தலைத் தடுப்பார் எவருமிலர். ஆதலால், அவர் வழிமுறை  மணங்கட்குக் காரணங் காட்ட வேண்டுவதில்லை. கீழோர், நோயும் மாதப்பூப்பும் சண்டையும்போலச் சிறு கூட்டத்தடை ஏற்படினும், அதைக் காரணமாகக் காட்டி மறுமணஞ் செய்துகொள்வர். முதல் மனை விக்கு ஓராண்டு பிள்ளையில்லா விடின், உடனே மறுமணஞ் செய்து கொள்வது சிலர் இயல்பு. சிலர், பிள்ளை யிருப்பினும், இருபாலும் இல்லையென்றும் பலரில்லையென்றும் சொல்லிக் கொண்டு, மறுமணஞ் செய்வதுண்டு. இது இன்றும் தொடர்ந்து வருகின்றது.

3. மண நடைமுறை

    பண்டைத் தமிழ் மணங்கள் பின்வருமாறு நடந்து வந்தன:

(1) மணப்பேச்சு

    பொதுவாக, ஓர் இளைஞனுக்குப் பதினெட்டாண்டு நிரம்பிய பின், அவன் பெற்றோர் அவன் காமக் குறிப்பறிந்தோ தாமாகக் கருதியோ, பெரும்பாலும் மரபுப்படி ஒத்த குலத்தில் ஒரு பெண்ணைப் பேசி மணஞ் செய்துவைப்பர்.