பக்கம் எண் :

39



வறிது பெயர்குவ ரல்லர் நெறிகொளப்
பாடான் றிரங்கு மருவிப்
பீடுகெழு மலையற் பாடி யோரே" 
(புறம்.124)

என்று, செல்லினுந் தப்பாத மலையமான் திருமுடிக்காரியின் வள்ளன் மையைப் புகழ்ந்துள்ளார் கபிலர்.

    நாள்கோள்களின் இயக்கத்தால் மழையும் மழையின்மையும் போல நன்மை தீமை விளைவது உண்மையாயினும், அவ் விளைவை அவ் இயக்கத்திற்குக் காரணமான எல்லாம் வல்ல இறைவன் ஏற்பாடாகக் கொள்வதல்லது, ஞாலம்போல் உயிரற்ற அஃறிணையிடப் பொருள்களாய நாள்கோள்களின் செயலாகக் கொள்வது எங்ஙனம் பொருந்தும்? தமிழ்நாட்டுக் கீழைக்கரைப் புயற்சேதத்தால் துன்புற்ற மக்கட்கு சென்னை மாகாண முதலமைச்சர் மதிதகு காமராச நாடார் புகைவண்டி வாயிலாய் நடைப்பிரகாரம் அனுப்பினாரெனின், அம் முதலமைச்சர்க்கு நன்றி கூறுவதல்லது அப் புகைவண்டிக்கு நன்றி கூறுவது பொருந்துமோ?

    ஒவ்வொரு நன்முயற்சிக்கும் மங்கலவினைக்கும், நாளுங் கிழமையும் ஓரையும் வேளையும் பார்த்துப் பார்த்து என்றும் அச்சத் தோடேயே வாழ்வதால், இந்தியர் சராசரி வாழ்நாள் குறைந்தும்; அவற்றைப் பாராத மேனாட்டார் வாழ்நாள் கூடியும் உள்ளன. இவ்வுண் மையைக் கீழ்வரும் சராசரி வாழ்நாட் பட்டியிற் காண்க.

நாடுகணக்கெடுத்த ஆண்டுஆண்
ஆண்டு
பெண்
ஆண்டு
1. ஆலந்து (Holland)1931-35 65.166.4
2. ஆத்திரியா (Austria)1932-3463.4867.14
3. நார்வே 1921-3160.98 63.84
4. அமெரிக்கா 193760.7565.08
5. இங்கிலாந்து1937 60.1864.40
6. செருமணி1932-3459.86 62.81
7. சுவிட்சர்லாந்து1920-3259.2563.05
8. பிரான்சு1928-3354.3059.02
9. இத்தாலி1930-3253.76 56.00
10. இரசியா 1926-2741.9348.79
11. சீனா1929-31 34.8534.63
12. இந்தியா193126.9126.56

    நாளும் வேளையும் பார்ப்பவர் வாழ்நாள் கூடியும், பாராதார் வாழ்நாள் குறைந்தும், இருப்பதிற்குப் பதிலாக, அவை நேர்மாறாயிருப்பது கவனிக்கத் தக்கது. இந்தியர் வாழ்நாட் குறைவிற்கு வறுமையும் வெப்பமிகையும் பெருங் காரணமேனும், நன்னாள் வினை செய்கையால் சிறிதும் அதற்கு ஈடு செய்யப்படாமையை நோக்குக.