"கூடினர் புரிந்து குணனுணப் பட்டோர் சூடின ரிட்ட பூவோ ரன்னர்". (பாலைக்கலி, 22) | என்று ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு பாடப்பட்ட நிலைமை இன்று முள்ளதெனின், என் சொல்வது? பெண்டிர் நுகர்ச்சிப்பொருள் நிலைமை யினின்று வாழ்க்கைத்துணை நிலைமைக்கு இன்னும் முற்றும் உயர்த்தப் படவில்லை என்பதே இதனால் அறியப்படும் உண்மையாம். இனி, பெண்டிரின் உறுப்பியல்பற்றியும், மச்சமறுப்பற்றியும், பிறப்பு வரிசை பற்றியும், நல்லவுந் தீயவுமாக எத்துணையோ சொல வடைகளும் பழமொழிகளும் உள. அத்தகைய விதப்பீடுகள் ஆட வரைப்பற்றி மிகுதியாயில்லை. இருப்பனவும் பெரும்பாலும் நல்லவையே. இவ்வாறு பெண்பாலைப்பற்றி நிற்கும் இழிவெல்லாம், மணமகளின் சமன்மைக்குத் தடையாயிருத்தலின், அவற்றைத் திருத்திக்கொள்வது தமிழர் கடன். ஆயின், பெண்ணின் பெண்மைபற்றியும் மென்மைபற்றி யும் கற்புக்காவலாக ஏற்பட்டுள்ள எல்லாக் கட்டுப்பாடுகளும், பெண் ணலத்திற்கே யாதலின், அவை என்றும் இருந்தே தீரல்வேண்டும். கணவனாரும் மனைவியாரும் ஒருவரோடொருவர் உரையாடும்போது, கணவனார் ஒருமையிலும் மனைவியார் உயர்வுப் பன்மையிலும் பேசினாலும், படர்க்கையில் இருவரும் மதிப்பாகவே பேசுதல் வேண்டும். கூலிவேலை செய்யும் கல்லா மக்களாயின், இருவரும் ஒருமையிற் பேசிக்கொள்ளலாம். மனைவியார் கணவனாரின் பெயரைக் குறிப்பிடும்போது மதிப்பொடு குறிப்பிடின் குற்றமாகாது. மங்கலம் எங்கணுந் தங்குக! |