பக்கம் எண் :

74


பார்ப்பனத்தெருவழிச் செல்லவும் முடிந்தது. தமிழ் தனிமொழியென்றும் தமிழ நாகரிகம் தனிப்பட்டதென்றும், தமிழர் யார் என்பதும், எந் நாட்டினர் என்பதும், ஆரியரே தமிழரிடம் நாகரிகத்தைப் பெற்றனர் என்பதும் வெளியாயின. ஆங்கிலக்கல்வி யென்னும் நன்மைதீமை யறியத்தக்க கல்வியினால், தமிழர் பகுத்தறிவுக்கண் பெற்றுத் தாம் இழந்தவுரிமைகளையெல்லாம் சிறிது சிறிதாய் மீளப்பெற்று வருகின்றனர்.

5. தமிழரசர் மரபுகள்

    1. பாண்டியர் : சரித்திரத்திற்கு உட்படாதவர்: கபாடபுரம் மூழ் கியபின், மணவூரிலிருந்தாண்ட குலசேகர பாண்டியன் முதல் திருஞான சம்பந்தர் காலத்துக் கூன்பாண்டியன்வரை, 74 பாண்டியர் பெயர்கள் திருவிளையாடற்புராணத்திற் கூறப்படுகின்றன.

    கடைக்கழக முடிவின் பின், களப்பிரர் என்ற வகுப்பார் பாண்டி நாட்டைச் சிறிதுகாலம் ஆண்டுவந்தனர்.

    சரித்திரத்திற்கு உட்பட்டவர்

முதல் மரபு

    கடுங்கோன் *(கி.பி. 590 - 620), மாறவர்மன் (620 - 45), சேந் தன் (645 - 70), அரிகேசரி மாறவர்மன் (670 - 710), கோச்சடையன் (710 - 40), மாறவர்மன் ராஜசிம்மன்I (740 - 65), ஜடில பராந்தக நெடுஞ் செழியன் (765- 815), ஸ்ரீ மாறன் (815 - 62), வரகுணவர்மன் (862 - 80), பராந்தக வீரராகவன் (880 - 900), மாறவர்மன் ராஜசிம்மன்II (900 - 20).

    கி.பி. 925 முதல் 12ஆம் நூற்றாண்டுவரை பாண்டிநாடு சோழர் வயப்பட்டிருந்தது.

இரண்டாம் மரபு:

    ஜடாவர்மன் குலசேகரன் (1190 - 1217), மாறவர்மன் சுந்தரபாண்டி யன் (1216 -38), மாறவர்மன் சுந்தரன் (1238), ஜடாவர்மன் சுந்தரன் (1251), ஜடாவர்மன் வீரபாண்டியன் (1253), மாறவர்மன் குலசேகரன் (1268), ஜடா வர்மன் சுந்தர பாண்டியன் (1276), மாறவர்மன் விக்கிரம பாண்டியன் (1283), ஜடாவர்மன் வீரபாண்டியன் (1296), ஜடவர்மன் சுந்தரபாண்டியன் (1303).

    பின்பு, அலாவுடின், கம்பன்னவுடையார், நாயக்க மன்னர், ஆர்க்காட்டு நவாபு, ஆங்கிலேயர் என்பவர் முறையே பாண்டிய நாட்டைக் கைப்பற்றினர்.

    2. சோழர் : சரித்திரத்திற்குட்படாதவர் - முற்காலத்தவர்: சூரியன், மனு, இக்குவாகு, ககுத்தன், புலியும்மானும் ஒரு துறையுண்ண ஆண்டவன், மாந்தாதா, முசுகுந்தன், தேவர்க் கமுதமளித்தவன், வல்ல பன், சிபி, சுராதிராசன், சோளன், இராசசேகரி, பரகேசரி, காலனிடத்தில் வழக்குரைத்தோன், காந்தன், காகந்தி, அனைத்துலகும் வென்றோன், வேந்தனைக் கொடியாக வைத்தோன்,


இங்குக் கூறப்படும் மரபுகள் உயர்திரு நீலகண்ட சாஸ்திரியார் அவர்களின் 'Pandyan Kingdom' என்ற நூலைத் தழுவியவை.