பக்கம் எண் :

தமிழர் வரலாறு-1113

அடியில் தன்னள வரசர்க் குணர்த்தியதுவடிம்பலம்ப நின்ற பாண்டியன் செய்தி. ஈரரசரும் ஒருகுடியினர் என்னுங் கருத்தால், இருவர் செயலும் ஒருவர்செயலாகக் கொள்ளப்பட்டன.

தமிழிலக்கியத்திற் கூறப்பட்டுள்ளமுதற் கடல்கோள் இதுவே. ஆப்பிரிக்காவும்ஆத்திரேலியாவும் குமரிநாட்டினின்று அறவேபிரிந்து நெடுந்தொலைவு நீங்கிவிட்டன.ஆப்பிரிக்கா பிரிந்ததனால் அரபிக் கடல்தோன்றிற்று. அது வங்கக் கடலினும் முந்தித்தோன்றியதனாலேயே, வாரணன் மேற்றிசைத்தலைவனாகக் கொள்ளப்பட்டான்.

பழம்பாண்டி நாட்டின் தென்பெரும் பகுதிமூழ்கவே, தலைக் கழகமும் ஒழிந்தது.

கடல்கோள் நிகழ்ந்தவுடன், ஒருபெருங்கூட்டத்தார் வடதிசை நோக்கிச்சென்றிருத்தல் வேண்டும் . சிறுசிறு கூட்டத்தாரும்தனிப்பட்டவரும் வடமேற்கும் வடகிழக்கும் பல்வேறுநாடுகட்குச் சென்று, கடல்கோட் செய்தியைப்பரப்பியிருக்கின்றனர். பிற்காலத்தில், அந்நாடுகள் ஒவ்வொன்றிலும் கடல்கோள் அல்லது பெருமழை வெள்ளம் நிகழ்ந்ததாகக் கதைஎழுந்திருக்கின்றது.

அலோரசு (Alorus)என்னும் பாபிலோனிய அரசன் காலத்தில்,பிலித்தியரின் (Philistines)தாகோன் (Dagon)தெய்வத்தைப்போல் அரை மாந்தனும் அரைமீனுமான(அதாவது, அரைக்கு (இடுப்பிற்கு) மேல் மாந்தன்வடிவமும் அதற்குக்கீழ் மீன் வடிவமுங் கொண்ட),ஓயன்னெசு (Oannes) என்னும்ஓர் உயிரி பாரசீகக் குடாக்கடல் (PersianGulf) வழியாக வந்து,பாபிலோனியருக்குக் கல்வி முழுவதையும் நாகரிகக்கலைகள் யாவற்றையும் கற்பித்ததாகப்பாபிலோனிய வரலாறு கூறுகின்றது.

அவ் வோயன்னெசு, மேற்கூறிய முதற்கடல்கோட்குப் பின், பாண்டிநாட்டினின்று சென்றஒரு தமிழறிஞனாகவே யிருத்தல் வேண்டும். அவனுக்குஅரைமீன் வடிவங் கட்டிக் கூறியதற்கு அவன் கடல்வழியாகச் சென்றதும், பாண்டியனுக்கு மீனக்கொடியும்மீன முத்திரையும்பற்றி மீனவன் என்னும்பெயரிருந்தமையுமே கரணியமாகும்.

தமிழக் கலவணிகர் மேல்கடற்கரையோரமாகவே கராச்சி வழியாகச் சென்று, பாரசீகக்குடாக்கடலுள்ளும் செங்கடலுள்ளும் புகுந்து,மேலையாசியாவொடும் எகிபது நாட்டொடும் வணிகஞ்செய்து வந்ததாகத் தெரிகின்றது. இராமச்சந்திரதீட்சிதரின் 'தமிழர் தோற்றமும் பரவலும்'என்னும் ஆங்கில நூலைப் பார்க்க.