பக்கம் எண் :

தமிழர் வரலாறு-1119

நன்கறிந்து காட்டு எலியட்டு (ScottElliot) எழுதியுள்ள 'மறைந்தகுமரிக்கண்டம்' என்னும் ஆங்கில நூலுட் போந்தபடத்தினாலே, ஒரு பெரு மலையானது மேலைக்கடலில்தொடங்கி........ மடகாசுக்கர் (Madagascar)என்ற ஆப்பிரிக்கத் தீவுவரை சென்றதாகத்தெரிகின்றது.. ........ இம் மலையைத் தமிழிற்குமரியென்றும் வடமொழியில் மகேந்திரம் என்றும்,முன்னோர் கூறினாரென்பதற்குக் காரண முண்டு.சிவதருமோத்தரம் என்னுஞ் சைவவுபாகமத்தில்,பொதியிற்குத் தென்பால் மகேந்திர முண்டென்றும்,அந் நூலுரையுள் தெற்குமுதல் வடக்கு ஈறாக அஃதுஇருந்ததென்றும் கூறப்பட்டுள்ளது. அதனடிவாரத்துள்ளதேசம் பொன்மயமான இலங்கை யென்றும்குறிக்கப்படுகின்றது" என்று பேரா. கா.சுப்பிரமணியப் பிள்ளை சை. சி.நூ.ப. கழகப்பதிப்பான தொல் காப்பிய எழுத்ததிகாரநச்சினார்க்கினியத்திற்குத் தாம் வரைந்துள்ளஆராய்ச்சி முன்னுரையிற் கூறியுள்ளார்.

"உன்னதத்தென் மயேந்திரமே யுயர்மலையஞ்சையகிரி
வின்னவிலுஞ் சுத்திகமே யிருக்குமுயர் விந்தியமே
பன்னுபுகழ் மிகுபாரி யாத்திரமே யெனப்பகர்ந்த
இன்னகிரி யேழுமுதற் குமரிதலத் திசைந்தனவே."
 

"அங்கமெதிர் நிரனிறையாற் சமாக்கியமுமணிமலையுஞ்
சங்கமுந்தண் குமுதமுநல் வராகமெனுந் தலந்தானுந்
துங்கமலி பொதித்தென்பாற் றொடர்ந்தவடி வாரத்தின்
அங்கனக விலங்கையுமேழ் வரைச்சார லடித்தேசம்." 

(சிவதருமோத்தரம்,கோபுரவியல்,47,48)

இச் செய்யுள்களினின்று, இடைக்கழகக்காலத்தில், குமரி முனைக்குத் தெற்கில் பழையகுமரிமலைத் தொடரின் பகுதியாகவோ தனியாகவோ ஒருமலை யிருந்த தென்றும், அதனின்றே குமரியாறுதோன்றிக் கிழக்கு நோக்கி யோடிய தென்றும்,இலங்கை இந்தியா வொடு இணைந்திருந்ததென்றும்,குமரியாறும் பொருநையாறும் இலங்கையூடும்ஓடியிருக்கலா மென்றும், பாண்டிநாடு குமரிமுனையினின்று 500 கல் தொலைவு தெற்கேநீண்டிருந்திருக்கலா மென்றும் உய்த்துணரப்படும்.

சோழனுக்கு உறையூரும், சேரனுக்குத்திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்தகருவூரும் தலைநகராயிருந்தன. பாண்டியன் தலைநகர்,ஆட்சிக்கும் நீர்வாணிகத்திற்கும் ஒருங்கேபயன்பட்டது. நெல்லை மதுரை முகவை மாவட்டங்களின்மேல்பகுதியும் கொங்குநாடும் வேம்பாய் (Bombay)மாநிலத்தின் மேல்பாகமும் சேரநாடா யிருந்தன.