பக்கம் எண் :

118தமிழர் வரலாறு-1

திசைபற்றிப் பாண்டியநாடு தென்புலம்என்றும், சோழநாடு குணபுலம் என்றும், சேரநாடுகுடபுலம் என்றும் சொல்லப்பட்டன. பாண்டியனுக்குத்தென்னன் அல்லது தென்னவன் என்னும் பெயரும்எழுந்தது. முந்நாடும் தனித்தனி நாடென்றும், ஒருங்கேதமிழகம் என்றும் பெயர் பெற்றன.

கடல்கோட்குப்பின் எஞ்சியிருந்தபழம்பாண்டி நாட்டுப் பகுதியின் ஊடு, குமரி என்னும்பேரியாறு ஓடிற்று.

"தெனாஅ துருகெழு குமரி" 

(புறம்.6:2)

என்பதனால் அதன் பெருமையும் வேகமும்அறியப்படும்.

"வார ணாசியோர் மறையோம் பாளன்
ஆரண வுவாத்தி அபஞ்சிகன் என்போன்
பார்ப்பனி சாலி காப்புக்கடை கழிந்து
கொண்டோற் பிழைத்த தண்ட மஞ்சித்
தென்றிசைக் குமரி யாடிய வருவோள்" 

(மணிமே.13:3-7)

என்பதனால், பண்டைநாளில்,வடநாட்டிற் கங்கையாற்றின் கரையில்வாழ்ந்தோரும், தம் தீவினை போக்க வந்துநீராடுமாறு, குமரியாறு ஒரு சிறந்த திருநீர்நிலையாகவிருந்ததை யறியலாம்.

பாண்டியன் தன் தலைநகரைக்குமரியாற்றின் கயவாயில் அமைத்ததாகத்தெரிகின்றது. கயவாய் என்பது ஆறு கடலொடுகலக்குமிடம்.

"கடன்மண் டழுவத்துக் கயவாய் கடுப்பக" 

(மலைபடு.528)

பாண்டியன் தலைநகர் கடல்வழியாகவருவோர்க்கு வாயில்போல் இருந்தமையால், கதவம்அல்லது கதவபுரம் என்று பெயர் பெற்றிருக்கலாம்.

கபாடபுரம் என்னும் வடசொல்'அலைவாய்', என்பதன் மொழி பெயர்ப்பாகவும்இருக்கலாம்.

கடத்தல்=கடந்துசெல்லுதல். கட-கடை=வாயில். கட - கடவு= கடந்து செல்லும் வழி. கடவு - கதவு = வாயில், வாயிலடைப்பு.

ஒ. நோ:door - shutter, entrance. கதவு - கதவம் = பெருங்கதவு.

கதவம் - . கவாட - கபாட (முறைமாற்றுப் போலி).

வடமொழியில் இச் சொற்கு மூலம் இல்லை.

"குமரிமலை, கடல்கொண்ட நாட்டில்எவ்வாறு அமைந்திருந்தது என்று ஆயுமிடத்து, அந்நாட்டின் பகுதிகளை