பக்கம் எண் :

134தமிழர் வரலாறு-1

கொண்டுபோகப்பட்ட தென்றும், பிரித்தானியக்கலைக்களஞ்சியம் கூறுகின்றது. சாலி (சாவகம்)நியூகினியாப் பக்கத்திலிருப்பதால்,சீனத்திற்குமுன் சாலிக்குக் கரும்புசென்றிருக்கும் என்பதை உய்த்துணரலாம்.

விண்ணுலகத்திற்கு மாகம் என்பது ஒருபெயர்.

"மாகந்தொட நனிநிவந்த கொடி" 

(ஞானா.34:15)

மாகம் என்பது நாகம் எனத் திரியும்.

"நாகநீள் நகரொடு நாகநா டதனொடு" 

(சிலப்.1:21)

என்பதில் நாகநீள்நகர் என்பதுதேவருலகைக் குறித்தல் காண்க. ஆகவே, நாகநாடென்பதுமேலை யுலகத்திற்கும் கீழை நாடுகட்கும் பொதுப்பெயராம்.

சாலிநாட் டரசர்க்கு இந்திரன்என்னும் பட்டம் இருந்தது. வெள்ளையானைகீழைநாடுகளுள் ஒன்றாகிய கடாரத்தில்(பர்மாவில்) வாழ்ந்தது. இந்திரன் யானைவெள்ளையானை யென்றும், அதன் பெயர் ஐராவதம்என்றும் தொல்கதை கூறும். கடாரத்தில்வெள்ளையானை இருந்ததால், அங்கு ஓடும் ஆறு ஐராவதிஎனப்பட்டது.

விண்ணுலகப் பெயரும் தேவர்கோன்பெயரும் வெள்ளை யானையும் கீழைநாட்டிற்குஇசைந்ததால், எண்டிசைத் தலைவருள் ஒருவனாகியதேவர்கோனுக்குக் கீழைத்திசை குறிக்கப்பட்டது.

சேரருள் ஒருவன், இந்திரன் என்னும்பட்டங்கொண்டவன் ஆண்ட நாடாகிய சாலியினின்றுதமிழகத்திற்குக் கரும்பைக் கொண்டுவந்துபயிராக்கினான். அதனால், அவன் மரபில் வந்த

அதிகமான் நெடுமான் அஞ்சியை,

"அமரர்ப் பேணியும் ஆவுதி யருத்தியும்
அரும்பெறல் மரபின் கரும்பிவட் டந்து
நீரக விருக்கை யாழி சூட்டிய
தொன்னிலை மரபினின் முன்னோர் போல
.....................................
வழுவின் றெய்தியும் அமையாய்" 

(புறம்.99)

என்றும், அவன் மகன் பொகுட்டெழினியை,