"அந்தரத் -தரும்பெற லமிழ்தம் அன்ன கரும்பிவட் டந்தோன் பெரும்பிறங் கடையே" | (புறம்.392) |
என்றும் பாடினார் ஒளவையார். இங்ஙனம், நிலவணிகரும் நீர்வணிகரும்மூவேந்தரும், ஞாலத்தின் பலவிடங்கட்கும் சென்று,ஆங்காங்குள்ள அரும் பொருள்களையெல்லாம்கொணர்ந்து, தமிழகத்தையும் தமிழர்வாழ்க்கையையும் வளம்படுத்தினர். சீனத்தினின்று கற்பூரம் கற்கண்டுசீனக்காரம் முதலியனவும், சாலியினின்று கரும்புகராம்பூ திப்பிலி (பண்டகி) முதலியனவும்,மொலுக்காசினின்று அட்டிகமும் (சாதிக்காயும்),இந்தோனேசியா வென்னும் கீழிந்தியத்தீவுக்கணத்தினின்று கொடியீந்து என்னும்சவ்வரிசியும், மலையாவினின்று பாக்கு என்னும்அடைக்காயும், இலங்கையினின்று கருவாப்பட்டையும்,ஆபுகானித்தானம் என்னும் காந்தாரத்தினின்றுபெருங்காயமும், அரபியாவினின்று அடப்பம் (வாதுமை),கொடிமுந்திரி, சுராலை (சாம்பிராணி) முதலியனவும்,மேலையாசியாவினின்று கசகசா, அத்திரி (கோவேறுகழுதை) முதலியனவும், சின்ன ஆசியாவினின்றுகொத்துமல்லி, சீரகம், பெருஞ் சீரகம்,கொங்காரப்பூ (குங்குமப்பூ) முதலியனவும்,மெகசிக்கோ வினின்று மிளகாயும்,அமெரிக்காவினின்று வள்ளி யென்றும்சருககரைவள்ளியென்றும் சொல்லப்படும் சீனிக்கிழங்கும், பிறவிடங்களினின்று பிறவும் வந்துசேர்ந்தன. கி.மு. 1500 போல் ஆரியர்இந்தியாவிற்கு வரும்வரை, தமிழ் மொழியும்தமிழிலக்கியமும் தமிழ நாகரிகமும் தமிழர்வாழ்க்கையும், இம்மியும் ஆரியங் கலவாது முழுத்தூயநிலையில் இருந்துவந்தன.
|