பக்கம் எண் :

தமிழர் வரலாறு-127

ரேலியாநோக்கியும் தென்னாப்பிரிக்கா நோக்கியும் குமரி மாந்தர் படர்ந்திருத்தல் வேண்டும். நால்வகை யெழுத்தில் முதலதான பட வெழுத்து (Picturewriting or Pictograph) பழங் கற்காலத்தில்தோன்றி யிருத்தல் வேண்டும்.

இயற்கை யுணவு தேடத் தெரிந்ததும், எளிய உறையுள் அமைத்ததும், அற்றம் மறைத்ததும், அழகுணர்ச்சி தோன்றியதும், தீயைப் பயன்படுத்தியதும், இயற்கைமொழி வளர்த்ததும்,படவெழுத்தைப் பயன்படுத்தியதும் பழங்கற்கால மாந்தரின் அறிவுநிலை யென்னலாம்.

2. புதுக் கற்காலம் (New Stone Age)

(தோரா. கி.மு. 1,00,000-50,000)

முந்தியல் குமரிமாந்தர், பழங் கற்காலக் கருவிகளைத் திண்கனக் கருங்கல்லால், வழவழப்பாகவும் மிகக் கூரியனவாகவும் செய்துகொண்ட காலம் புதுக் கற்காலமாகும்.

அவர் வாழ்ந்த இடம் குறிஞ்சியும்அதையடுத்த முல்லையு மாகும். வாழ்க்கைத்திருத்தத்தாலும் மாந்தர் தொகைப் பெருக் காலும்,இயற்கையாகவே அவர் முல்லைநிலத்திலும்பரவியிருத்தல் வேண்டும்.

அவர் செய்த தொழில், பெரும்பான்மைகால்நடை வளர்ப்பும் வானாவாரிப் பயிர்விளைப்பும், சிறுபான்மை பழங்கற்கால மாந்தர்செய்தன.

மலையடிவாரங்களிலும் மலைமேலும் வாழும்ஆடு, மாடு, எருமை ஆகிய மூவிலங்கினங்களையும், அவர்பிடித்துப் பழக்கி வீட்டு விலங்காக்கினர்.மூன்றும் பால் தந்தன. ஆடு பால் தருவதொடுஊனுணவுமாயிற்று. காளைமாடும் கடாவெருமையும்ஏருழவிற்குப் பயன்பட்டன. மானையும் ஆமானையும்காட்டுப்பன்றியையும் முயலையும் உடும்பையும்பிடித்து ஊனுணவிற்குப் பயன்படுத்தினர். இன்றுபன்றியிறைச்சி யுண்பவர் ஒருசாராரே. அவரினுஞ்சிறு தொகையினர் மாட்டிறைச்சி யுண்பவர்.பறவைகளுள் கோழி, புறா, குயில், காடை, கதுவாலிஆகியவற்றின் ஊனை விரும்பியுண்டனர்.காட்டுக்கோழியைப் பழக்கி வீட்டுக்கோழியுமாக்கினர்.

வானாவாரிப் பயிர்கள் என்பன,ஏர்க்காடும் கொத்துக்காடு மாகிய நிலத்தில்மழையினாலேயே விளைந்த தினை வரகுபோன்றசிறுதவசங்களும், அவரை துவரை போன்ற பயறுவகைகளுமாகும். புல்வெளிகளா யுள்ளவற்றைக் கால்நடைமேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, குறுங்காடும்பெருங்காடுமா யுள்ளவற்றைத் தீயினாற்சுட்டெரித்துக் கொன்று விளைநிலமாக்கிய விடம்,பிற்காலத்திற் கொல்லை யெனப்பட்டது. அடர்ந்தமரஞ்செடி கொடிகளால் இருண்டு