பக்கம் எண் :

தமிழர் வரலாறு-145

மதவியல் வாழ்க்கையில், பொற்காலமருதநிலத் தமிழர், பழைய குறிஞ்சி முல்லைத்தெய்வங்களுடன் இறந்த அரசனையும் தெய்வமாகவணங்கியதாகத் தெரிகின்றது.

அக்காலத்தில், பெரும்பண்ணைகளிலெல்லாம், தாமாக வந்து ஒட்டிக்கொண்டவரும்விலைக்கு வாங்கப்பட்டவருமாக, இருசார் அடிமையர்இருந்தனர். அவர் தப்பி ஓடிப்போனாலும் அடிமையரென்று அறியப்படுவதற்கு, அவர் காதில்துளையிடப்பட்டது.

தெய்வப்பற்று மிகுந்தபிற்காலத்தில், ஆண்டி முதல் அரசன்வரை எல்லாவகுப்பாரும் தம்மை இறையடியார் என்று காட்டுதற்குத்தம் காது குத்தித் துளையிட்டுக்கொண்டதாகத்தெரிகின்றது. அத் துளை தூர்ந்து போகாவாறே,முதலில் ஓலைச் சுருளும் பின்னர்ப் பொன்னோலையும்பிறவணிகளும் பெண்டிர் அணிந்துவந்திருக்கின்றனர். பாம்படம் (நாகபடம்),தண்டொட்டி, அரிசித்தழுப்பு, பூச்சிக்கூடு, மேலீடுஎன்னும் ஐவகை நகைகளை யணிதற்குத் தம்இளமையிலேயே குணுக்கு என்னும் குதம்பையால் தம்காதுத் துளையைப் பெரிதாக வளர்த்துக் கொண்டனர்.குமரிநாட்டுடன் இணைந்திருந்த பாண்டிநாட்டில், இவ்வழக்கம் இன்றும் இருந்துவருகின்றது. அது காதுவளர்த்தல் எனப்படும். ஆடவர் தம் சோணைத்தண்டைஅத்துணை நீட்டாவிடினும், குழையும் குண்டலமும்குண்டுக் கடுக்கனும் அணியுமளவு துளையை அகலித்துக்கொண்டனர்.

உழவுத்தொழில் வரவர வளர்ந்து முழுநேரவுழைப்பையும் வேண்டியமையாலும், அதற்குப் பல புதுக்கருவிகள் வேண்டி யிருந்தமையாலும், வாழ்க்கையிலும்நாகரிகம் வளரவளரப் புதிது புதிதாகப் பல தேவைகள்தோன்றியமையாலும், எல்லார்க்கும் எல்லாவேலையுஞ் செய்ய நேரமில்லை யென்றும்;நேரமிருப்பினும், விருப்பங்களும் திறமைகளும்இயற்கையாகவே மக்கட்கு வேறு பட்டிருப்பதால்,எல்லாரும் எல்லா வேலையுஞ் செய்ய வியலா தென்றும்கண்டபோது, இயற்கையாகவே பற்பல தொழிற்பாதீடுகள் வெவ்வேறு காலத்தில் ஏற்பட்டன.

மருதநில வாழ்க்கையில், அளவானஊர்தொறும், முதன்முதற் கோவில் வழிபாடு செய்ய ஒருபூசகனும், காவல் செய்து வழக்குத் தீர்க்க ஒருதலைவனும், பண்டமாற்ற ஒரு கடைக்காரனுந்தோன்றியிருத்தல் வேண்டும்.

அதன்பின், உழவர்க்கு வேண்டியபொருள்களைச் செய்துதவப் பக்கத் துணையாகப் பலதொழிலாளர் படிப்படியாகத் தோன்றினர்.